பட்ஜெட் 2019: இஸ்ரோவுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு!

2024-ம் ஆண்டுக்குள் குழாய் மூலமாக நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

Web Desk | news18
Updated: July 5, 2019, 4:49 PM IST
பட்ஜெட் 2019: இஸ்ரோவுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு!
இஸ்ரோ
Web Desk | news18
Updated: July 5, 2019, 4:49 PM IST
"ஸ்டடி இன் இந்தியா திட்டம்" மூலம் வெளிநாட்டு மாணவர்களுக்கு நமது கல்வி முறை கற்றுத் தரப்படும், 3டி, செயற்கை நுன்னறிவு உள்ளிட்ட துறைகளில் இந்திய இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, ”விண்வெளி வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்த இஸ்ரோவின் கீழ் செயல்படும் புதிய அமைப்பு உருவாக்கப்படும்.

அன்னிய நாடுகளின் செயற்கைக் கோள்களை செலுத்தும் அளவுக்கு விண்வெளித் துறையில் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவாகியுள்ளது.

விண்வெளி வாய்ப்புகளை வர்த்தக ரீதியில் பயன்படுத்திக் கொள்ள இந்தியா முன்னுரிமை கொடுக்கும், இஸ்ரோவுக்கு ஒதுக்கப்படும் நிதி 6,000 ரூபாயில் இருந்து 10,000 கோடியாக உயர்த்தப்படும்.

மேலும், விண்வெளி வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்த இஸ்ரோவின் கீழ் செயல்படும் புதிய அமைப்பு உருவாக்கப்படும்.

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். உலகின் சிறந்த கல்வி முறையாக மாற்றும் இந்த கொள்கையில் பள்ளி மற்றும் உயர் கல்வித்துறையில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

"ஸ்டடி இன் இந்தியா திட்டம்" மூலம் வெளிநாட்டு மாணவர்களுக்கு நமது கல்வி முறை கற்றுத் தரப்படும் எனக்கூறிய அவர், 3டி, செயற்கை நுன்னறிவு உள்ளிட்ட துறைகளில் இந்திய இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

2024-ம் ஆண்டுக்குள் குழாய் மூலமாக நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

Also watch: வரி விதிப்பு எவ்வாறு கையாளப்படுகிறது? புறநாநூறு கூற்றை தமிழில் பேசி அவையை கலகலக்க வைத்த நிர்மலா

First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...