Home /News /national /

உலகப்புகழ்பெற்ற அமெரிக்க அருங்காட்சியத்தின் வாரிய உறுப்பினராக ஈஷா அம்பானி தேர்வு!

உலகப்புகழ்பெற்ற அமெரிக்க அருங்காட்சியத்தின் வாரிய உறுப்பினராக ஈஷா அம்பானி தேர்வு!

ஈஷா அம்பானி

ஈஷா அம்பானி

அமெரிக்க துணை அதிபர், தலைமை உச்சநீதிமன்ற நீதிபதி அங்கம் வகிக்கும் 17 பேர் கொண்ட வாரிய உறுப்பினர் குழுவில் ஈஷா அம்பானி இடம்பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அமெரிக்க தேசிய கலை அருங்காட்சியகம் என முன்னர் அறியப்பட்ட பெருமைமிகு ஸ்மித்சோனியன் தேசிய அருங்காட்சியகத்தின் வாரிய உறுப்பினராக ஈஷா அம்பானி தேர்வாகியுள்ளார். அமெரிக்க துணை அதிபர், தலைமை உச்சநீதிமன்ற நீதிபதி, செனட் மற்றும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் 17 பேர் கொண்ட வாரிய உறுப்பினர் குழுவில் ஈஷா அம்பானி இடம்பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் நிர்வாகப் பணிகளை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வாரிய உறுப்பினர்கள் மேற்கொள்வார்கள். செப்டம்பர் 23, 2021 முதல் புதிய உறுப்பினர்களின் பதவிக் காலம் தொடங்கியிருக்கிறது.

ரீஜெண்ட்ஸ் என அழைக்கப்படும் 17 பேர் கொண்ட நிர்வாக குழுவில் அமெரிக்க தலைமை நீதிபதி, துணை அதிபர், செனட் குழுவின் 3 உறுப்பினர்கள், ஹவுஸ் ஆஃப் ரெப்ரசண்டேடிவ்ஸ் குழுவின் 3 உறுப்பினர்கள், மற்றும் 9 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். மேலும் இந்த 17 பேர் தவிர்த்து அருங்காட்சியகத்தின் தலைவரான வான் அக்ட்மேலின் பதவிக்காலம் அக்டோபர் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. துணைத்தலைவராக டாக்டர். விஜய் ஆனந்தும், தூதராக இருக்கும் பமீலா ஹெச். ஸ்மித், செயலாலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் 1923ம் ஆண்டு தொடங்கப்பட்டு இயங்கி வரும் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் நியோலிதிக் காலம் தொடங்கி தற்காலம் வரையிலான சீனா, ஜப்பான், கொரியா, தெற்கு மற்றும் தெற்காசியா, இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த 45,000க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 2023ம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் புதிய வாரிய உறுப்பினர்கள் தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Also read:  மகன் ஆர்யனை கைது செய்த NCB அதிகாரி ஷாருக்கானை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியவர் – எதற்கு?

இது குறித்து ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் வாரியத் தலைவர் வான் அக்ட்மேல் கூறுகையில், “எங்கள் குழுவிற்கு நிபுணத்துவம் மற்றும் மேலும் பன்முகத்தன்மை இரண்டையும் கொண்டு வரும் புதிய உறுப்பினர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.”

அனைத்து கலை அருங்காட்சியகங்களும் பொதுமக்களின் புதிய எதிர்பார்ப்புகள், நிதி அழுத்தங்கள் என சவாலை எதிர்கொள்கின்றன. ஆசியாவின் கலைகள் மற்றும் கலாச்சாரங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம், குறிப்பாக இது ஆசிய நூற்றாண்டாகக் கருதப்படும் நிலையில், நம்மிடம் சிறப்பு வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகள் உள்ளன.

Also read:  மகன் ஆர்யனை கைது செய்த NCB அதிகாரி ஷாருக்கானை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியவர் – எதற்கு?

2023 ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்தின் நூற்றாண்டு நிறைவுபெறும், இந்த திறமையான புதிய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் தொலைநோக்கு பார்வையும் ஆர்வமும் எங்களைத் மேலும் துரிதப்படுத்தும்.
எங்களின் நிபுணத்துவத்தை இன்னும் அணுகக்கூடியதாகவும் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மற்றும்
ஆசிய கலைகள் மற்றும் கலாச்சாரங்களைப் புரிந்துகொண்டு செயல்பட உந்துதலை தரும் என இந்த அருங்காட்சியகத்தின் இயக்குனர் டேம் ஜில்லியன் கூறினார்.

புதிய உறுப்பினர்கள் ஒரு பார்வை:

ஈஷா அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இண்டர்நெட் வேகம் குறைந்து இருந்த காலத்தில் 2016ம் ஆண்டு இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை ஜியோ நிறுவனம் மூலம் தொடங்கி வைத்தவர். ஜியோவை உலகின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக்கியவர். இன்று 440 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் உடன் இந்தியாவின் மாபெரும் தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்குகிறது ஜியோ.

ஃபேஷன் தளமான ajio.com தொடங்கியது ஈஷா அம்பானியின் முயற்சியால் தான், ஜியோ மார்ட் நிறுவனத்தை ஈ-காமர்ஸ் துறையின் முன்னோடியாக மாற்றுவது போன்ற பணிகளிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார். இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், இந்திய கலையை உயர்த்துவது மற்றும் உலகளாவிய கலையை இந்தியாவிற்கு கொண்டு வருவது போன்ற பணிகளில் ஆர்வம் கொண்டிருக்கும் ஈஷா அம்பானி ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.

Also read:  பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் தேசதுரோக வழக்கில் கைது!

Brehm: 2008ம் ஆண்டு முதல் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் நண்பராக விளங்குபவர். Brehm Global Ventures LLC நிறுவனத்தின் தலைவர். 40 ஆண்டுகளுக்கும் மேலான அரசுத் தொடர்பு அனுபவம் கொண்டவர். ஃபார்ச்சூன் 100 பட்டியலில் இடம்பிடித்துள்ள இரண்டு நிறுவனங்களிலும், பல்வேறு என்.ஜி.ஒக்களிலும் பணியாற்றியவர். புரொடெக்டர் & கிராம்பிள் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து 2017ல் ஓய்வு பெற்றார். 13 ஆண்டுகாலம் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.

Kimmelman: 2015 முதல் 2019 வரை ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் தலைவராக இருந்த கிம்மெல்மேன் தற்போது மீண்டும் வாரிய உறுப்பினராகியிருக்கிறார். நியூயார்க் தேசிய வங்கியின் செயற்குழு உறுப்பினர், தலைவராக 32 ஆண்டுகளும், HSBC வங்கியின் இயக்குனராக 25 ஆண்டுகளும் பணியாற்றியவர்.
Published by:Arun
First published:

Tags: Isha Ambani, Reliance Jio

அடுத்த செய்தி