முகப்பு /செய்தி /இந்தியா / இரட்டை குழந்தைகளுக்கு தாயான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி.. குழந்தைகள் பெயர் அறிவிப்பு

இரட்டை குழந்தைகளுக்கு தாயான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி.. குழந்தைகள் பெயர் அறிவிப்பு

இஷா அம்பானி, ஆனந்த் பிரமல் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள்

இஷா அம்பானி, ஆனந்த் பிரமல் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தலைவர் முகேஷ் அம்பானியில் மகள் இஷா அம்பானிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு நேற்று ஆண் - பெண் என்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பெண் குழந்தைக்கு ஆதியா என்றும் ஆண் குழந்தைக்குக் கிருஷ்ணா என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.

2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் நாள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தலைவர் முகேஷ் அம்பானியில் மகள் இஷா அம்பானிக்கும், பிரமல் குழுமத் தலைவர் அஜய் பிரமல் தலைவர் மகன் ஆனந்த் பிரமல் அவருக்கும் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.

தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் ஒரு பெண் என்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். தற்போது வெளியிட்ட அறிக்கையில் நவம்பர் 19ம் நாள் குழந்தைகள் பிறந்ததைத் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகள் இருவரும் நலமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கிய தருணத்தில் அனைவரின் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஷா அம்பானி, ஆனந்த் பிரமல் தம்பதிகளுக்கு 2018 செப்டம்பர் மாதம் இத்தாலியில் நிச்சயிக்கப்பட்டு, டிசம்பர் மாதம் மும்பையில் திருமணம் நடைபெற்றது.

இவர்களின் திருமணத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர். அதில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரும், அமெரிக்க முதல் பெண்மணியுமான ஹிலாரி கிளிண்டன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னால் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ரத்தன் டாடா, பச்சன் குடும்பத்தினர், ரஜினிகாந்த், அமீர்கான் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Also Read : களைகட்டும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி.. அழகிய புகைப்பட தொகுப்பு இதோ!

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 45வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் தலைவர் முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானியை ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தில் தலைவராக அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Isha Ambani, Reliance, Reliance Retail