Home /News /national /

இந்தியாவில் XE வேரியன்ட் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் XE வேரியன்ட் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? மத்திய அரசு விளக்கம்

XE வேரியன்ட் கொரோனா வைரஸ் குறித்து வல்லுனர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

XE வேரியன்ட் கொரோனா வைரஸ் குறித்து வல்லுனர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

XE வேரியன்டால் பாதிக்கப்பட்ட நபர் என்று கூறப்பட்டவர் கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸையும் செலுத்தியுள்ளார்.

    இந்தியாவில் XE வேரியன்ட் கொரோனா பாதிப்பு மும்பையில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் அதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பல அலைகளை உருவாக்கியது. இந்தியாவில் கொரோனா முதல் அலைக்குபின் டெல்டா வைரஸின் இரண்டாவது அலை உருவானது. டெல்டா வைரஸ் தான் இந்தியாவில் பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது.

    அதன்பின் ஒமைக்ரான் இந்தியாவில் 3-வது அலையை ஏற்படுத்தியது. ஒமைக்ரான் அதிகம் பரவினாலும் இதனால் உயிரிழப்பு என்பது குறைவாகவே இருந்தது. இதனால் ஒமைக்கரான் மார்ச் மாதத்தில் குறைந்து வந்தது. தற்போது ஒமைக்ரானின் புதிய வேரியண்ட் XE மும்பையில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகின.

    இதையும் படிங்க - செல்ஃபி எடுக்கும்போது ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி.. குடும்பத்தாரின் கண்முன்னே நிகழ்ந்த சோகம்

    ஜனவரி 19-ம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக இந்த புதிய மாறுபட்ட கொரோனா திரிபு கண்டறியப்பட்டது. புதிய திரிபான எக்ஸ்இ முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம் பரவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்தியாவில் 4-வது அலை உருவாகக் கூடும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், 'மும்பையில் கொரோனா வைரஸின் XE வேரியன்ட் பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனை சுகாதார வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். இதில், மும்பையில் கண்டறியப்பட்டது XE வேரியன் கொரோனா பாதிப்பு அல்ல என்று தெரியவந்துள்ளது.

    இதையும் படிங்க - கையில் சகோதரன் உடன் பாடம் படிக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவி - மணிப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்

    XE வேரியன்டால் பாதிக்கப்பட்ட நபர் என்று கூறப்பட்டவர் கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸையும் செலுத்தியுள்ளார். 50 வயதாகும் அவருக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்கள் மற்றும் அறிகுறிகள் ஏதும் இல்லை. அவர் கடந்த பிப்ரவரி 10-ம்தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார். அதற்கு முன்பாக அவர் வேறு நாடுகள் எதற்கும் செல்லவில்லை. இந்தியாவின் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை பரிசோதனை செய்ததில் முடிவுகள் நெகடிவாக வந்தன.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Musthak
    First published:

    Tags: Corona

    அடுத்த செய்தி