ஹோம் /நியூஸ் /இந்தியா /

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மனு.. ’இதுதான் நீதிமன்றத்தின் வேலையா’ என சாடிய உச்சநீதிமன்றம்

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மனு.. ’இதுதான் நீதிமன்றத்தின் வேலையா’ என சாடிய உச்சநீதிமன்றம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

நீங்கள் நீதிமன்றத்து இதுபோன்ற மனுக்களுடன் வருவதால் நாங்கள் சட்டத்தை காற்றில் பறக்கவிட முடியுமா என கட்டமாக எச்சரித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவரை நீதிபதிகள் கடுமையாக சாடியுள்ளனர். நாட்டின் தேசிய விலங்காக 'புலி' உள்ள நிலையில், பசு பாதுகாப்பு அமைப்பான ’கோவாஷ் சேவா சதன்’ உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த விலங்கு பசுவாகும். பசுவை பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும்.

  எனவே, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அமைப்பு தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தது. அடிப்படை உரிமைகள் என்ற பிரிவின் கீழ் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

  இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே கவுல் மற்றும் அபே எஸ் ஒஹா ஆகியோரின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் மனுவைப் பார்த்து ஆத்திரமடைந்த நீதிபதிகள், இதுபோன்ற உத்தரவை பிறப்பிப்பதுதான் நீதிமன்றத்தின் வேலையா? ஏன் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்கின்றீர்கள். இதில் எந்த அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவசமாக சென்று வரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி!

  இதுபோன்ற அபராதம் விதிக்கும் விதமான மனுக்களை தாக்கல் செய்வது முறையல்ல. நீதிமன்றத்துக்கு இதுபோன்ற மனுக்களுடன் வருவதால் நாங்கள் சட்டத்தை காற்றில் பறக்கவிட முடியுமா என கட்டமாக எச்சரித்துள்ளனர். நீதிபதிகளின் காட்டமான எச்சரிக்கைக்குப் பின் மனுதாரர் வழக்கை திரும்ப பெற்றார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Case, Cow, Supreme court