தேசிய அரசியலுக்குச் செல்கிறாரா நாராயணசாமி?

தேசிய அரசியலுக்குச் செல்கிறாரா நாராயணசாமி?

நாராயணசாமி

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் பெயர் இடம்பெறவில்லை...

 • Share this:
  புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் பெயர் இடம்பெறாத நிலையில், அகில இந்திய காங்கிரஸ் செயல்பாடுகளில் அவர் களம் இறங்க திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  நாராயணசாமியின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடியும் முன்பே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்ததால், புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்தது. ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 15 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சியான திமுக 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு தொகுதியிலும் களம் காண்கின்றன.

  காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் பெயர் அதில் இடம்பெறவில்லை. ஏனாம் தொகுதியில் அவர் களம் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாராயணசாமி போட்டியிட மாட்டார் என காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது. அவர் பிரச்சாரத்தில் மட்டுமே பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  புதுச்சேரியில் தனியார் நிறுவனம் போல், காங்கிரஸ் செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாராயணசாமி போட்டியிடாததால் அவருக்கு எந்த இழப்பும் இல்லை என மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தாமதமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு என கூறப்படுகிறது.

  Must Read : ஸ்டாலினை வரவேற்க சக்தி வாய்ந்த வெடிகள்: காவல் துறை அதிகாரி உட்பட பலருக்கு தீ காயம்

   

  வேட்பாளர் பட்டியலில் நாராயணசாமி பெயர்  இடம்பெறவில்லை என்பதால் அவர் தேசிய அரசியல் களத்தில் பணியாற்றக்கூடும் என்று கூறப்படுகின்றது.
  Published by:Suresh V
  First published: