மோடி நிஜமாகவே சீர்த்திருத்தவாதியா? விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மே 2020
"மோடியின் விமர்சகர்களால் கூட அவரது ஆளுமைத்திறன் மீது விமர்சனங்களை முன்வைக்க முடியவில்லை"

பிரதமர் மோடி
- News18
- Last Updated: June 9, 2020, 11:00 AM IST
பிரதமராக மோடி பொறுப்பேற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவர் நிஜமாகவே சீர்த்திருத்தவாதியா? என்ற விவாதத்திற்கு மே 2020 ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. மோடியின் விமர்சகர்களால் கூட அவரது ஆளுமைத்திறன் மீது விமர்சனங்களை முன்வைக்க முடியவில்லை.
மோடி கரை படியாத கரங்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். அவரது அரசு ஊழலற்றதாக இருக்கிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் வாரிசுகள், உறவினர்கள் என்று வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. ஏழைகளுக்கு எதிரானவர் என்ற கட்டமைக்கப்பட்ட ஒன்று 2019 தேர்தல் முடிவுகளால் காணாமல் போனது.
மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியில் அவர் ஒரு சீர்த்திருத்தவாதி இல்லை என்று விமர்சிக்கப்பட்டார். ஆனால், மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அவரால் செய்ய முடியாத சீர்த்திருத்தங்களை மோடி தனது முதல் ஐந்தாண்டுகளில் செய்து காட்டினார். ஜி.எஸ்.டி, கனிமவள துறை சீர்த்திருத்தம், ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகள் ஆகியவற்றில் அவர் மேற்கொண்ட சீர்த்திருத்தங்கள் மிக முக்கியமானது. ஜன் தன் கணக்குகள், பயிர்களுக்கான காப்பீட்டு தொகை, அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், இலவச சிலிண்டர், முத்ரா கடன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம் ஆகியவை அடித்தட்டு மக்களுக்காகவையாக அமைந்தது.
தற்போது கொரோனாவால் பொருளாதாரம் மந்தமடைந்த போதும், சிறுகுறு நிறுவனங்களுக்கு கடன் வசதி அறிவிக்கப்பட்டது. மூன்று மாதங்களில் சுமார் 4.5 லட்சம் பி.பி.இ பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் அளவுக்கு நமது உற்பத்தி அதிகரித்துள்ளது.
மோடியால் கொள்கைகளை செயல்படுத்த முடியுமா...? முடியாதா...? என்ற கேள்வியை மே 2019 புதைத்தது. மோடி சீர்திருத்தவாதியா..? இல்லையா...? என்ற கேள்வியை மே 2020 இறுதியாக புதைத்துள்ளது.விமர்சகர்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது - ஒன்று வறட்டு மோடி எதிரியாக இருங்கள் அல்லது தீர்வு அளிப்பவர்களாக மாறுங்கள், ஏனெனில் கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தை புதிய வெளிச்சத்தில் இந்தியா பார்க்க உள்ளது.
Also See: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எவை... எவை...? - மாவட்டம் வாரியாக முழு பட்டியல்
மோடி கரை படியாத கரங்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். அவரது அரசு ஊழலற்றதாக இருக்கிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் வாரிசுகள், உறவினர்கள் என்று வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. ஏழைகளுக்கு எதிரானவர் என்ற கட்டமைக்கப்பட்ட ஒன்று 2019 தேர்தல் முடிவுகளால் காணாமல் போனது.
மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியில் அவர் ஒரு சீர்த்திருத்தவாதி இல்லை என்று விமர்சிக்கப்பட்டார். ஆனால், மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அவரால் செய்ய முடியாத சீர்த்திருத்தங்களை மோடி தனது முதல் ஐந்தாண்டுகளில் செய்து காட்டினார்.
தற்போது கொரோனாவால் பொருளாதாரம் மந்தமடைந்த போதும், சிறுகுறு நிறுவனங்களுக்கு கடன் வசதி அறிவிக்கப்பட்டது. மூன்று மாதங்களில் சுமார் 4.5 லட்சம் பி.பி.இ பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் அளவுக்கு நமது உற்பத்தி அதிகரித்துள்ளது.
மோடியால் கொள்கைகளை செயல்படுத்த முடியுமா...? முடியாதா...? என்ற கேள்வியை மே 2019 புதைத்தது. மோடி சீர்திருத்தவாதியா..? இல்லையா...? என்ற கேள்வியை மே 2020 இறுதியாக புதைத்துள்ளது.விமர்சகர்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது - ஒன்று வறட்டு மோடி எதிரியாக இருங்கள் அல்லது தீர்வு அளிப்பவர்களாக மாறுங்கள், ஏனெனில் கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தை புதிய வெளிச்சத்தில் இந்தியா பார்க்க உள்ளது.
Disclaimer: கட்டுரையாளர் அகிலேஷ் மிஷ்ரா, ப்ளூக்ராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுனத்தின் சி.இ.ஓ ஆக இருப்பவர். கட்டுரை மற்றும் கருத்துக்கள் அவரது தனிப்பட்டதே ஆகும்
Also See: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எவை... எவை...? - மாவட்டம் வாரியாக முழு பட்டியல்