உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அனைத்து பக்தர்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என கேரள அரசு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரம் தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது
கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் இன்று முதல் ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரள காவல்துறை சபரிமலையில் பணியாற்றும் போலீசார் பின்பற்ற வேண்டிய நெறிமுறை குறித்து அறிக்கை வெளியிட்டது.
அதில், போலீசார் என்னென்ன நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறப்பட்டுள்ளது. பக்தர்களிடம் எப்படி நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என பல விதமான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதில் 28-09-2018 உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என கேரள அரசு குறிப்பிட்டிருந்தது. இந்த அறிக்கை தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அனுமதியளித்தும், தேவஸ்தானம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மேலும் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த அறிக்கை கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி அறிந்த கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் அவரது பேஸ்புக் பக்கத்தில் அதிரடி கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், கேரள அரசு இது போன்ற முடிவுகள் எடுத்தால் கடந்த காலத்தில் ஏற்பட்டது போல் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பதிவிட்டிருந்தார்.
இந்த பேஸ்புக் பதிவை அறிந்த காவல்துறை ADGP அஜித்குமார், அந்த பகுதி நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
மேலும், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கேரளா அரசும், தேவஸ்தான நிர்வாகமும் எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறிய தேவஸ்தான அமைச்சர் K. ராதாகிருஷ்ணன், இது குறித்து உச்சநீதிமன்றம் முடிவெடுகட்டம் என விளக்கமளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala. Sabarimala, Sabarimala Ayyappan, Sabarimala Devasam board, Sabarimalai Ayyappan temple