ஹோம் /நியூஸ் /இந்தியா /

சொந்த தொகுதியில் வீடு கட்ட வேண்டும் என்ற ஞானம் இப்போதுதான் ஏற்பட்டதா? சந்திரபாபு நாயுடுவிற்கு ரோஜா கேள்வி..

சொந்த தொகுதியில் வீடு கட்ட வேண்டும் என்ற ஞானம் இப்போதுதான் ஏற்பட்டதா? சந்திரபாபு நாயுடுவிற்கு ரோஜா கேள்வி..

Roja MLA: சந்திரபாபு நாயுடு தன்னுடைய சொந்த தொகுதி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்கு கடந்த உள்ளாட்சித் தேர்தலில் குப்பம் தொகுதி வாக்காளர்கள் அளித்த தீர்ப்பே சாட்சியாக உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதிக்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளையும் பெருமளவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கைப்பற்றினர்.

குப்பம் தொகுதியில் சந்திரபாபுநாயுடு இதுவரை மூன்று முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார்.

மேலும் படிங்க: விவசாயிகள், இளைஞர்கள் நலனுக்காக காங்கிரஸ் போராடும்' - உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து பிரியங்கா காந்தி கருத்து

இந்த நிலையில் இன்று காலை ஏழுமலையானை தரிசித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா சந்திரபாபு நாயுடு தன்னுடைய சொந்த தொகுதி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்கு கடந்த உள்ளாட்சித் தேர்தலில் குப்பம் தொகுதி வாக்காளர்கள் அளித்த தீர்ப்பே சாட்சியாக உள்ளது.

தன்னை தேர்வு செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த பொதுமக்களுக்கு குடிநீர் வசதி கூட அவர் செய்து கொடுக்கவில்லை. குப்பத்தில் சொந்தமாக வீடு கட்டி கொள்வேன் என்று அவர் இப்போது கூறுகிறார்.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கொடுத்த மரண அடி காரணமாக சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் வீடு கட்டிக் கொள்வேன் என்று கூறுகிறார். இந்த ஞானம் இதற்கு முன் ஏற்படாதது ஏன் என்று அப்போது கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு : உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு

First published:

Tags: Andhra Pradesh