HOME»NEWS»NATIONAL»is budget 2021 give importance to fdi srs ghta

அந்நிய நேரடி முதலீட்டிற்கு (FDI) முக்கியத்துவத்தை அளிக்குமா இந்த 2021 பட்ஜெட்?

மத்திய பட்ஜெட் 2021 அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பொருளாதாரத்தில் வளர்ச்சி தூண்டுதல்களைத் அதிகப்படுத்துவதற்கும் இந்தியாவில் அதிக அந்நிய நேரடி முதலீடுகளை (Foreign Direct Investments (FDIs)) ஈர்ப்பதில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. 

அந்நிய நேரடி முதலீட்டிற்கு (FDI) முக்கியத்துவத்தை அளிக்குமா இந்த 2021 பட்ஜெட்?
மத்திய பட்ஜெட்
  • Share this:

நேரடி அந்நிய முதலீடு (FDI), பொருளாதார வளர்ச்சியில் முக்கிய காரணியாக இருக்கிறது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு கடன் அல்லாத நிதி ஆதாரமாகவும் இது இருக்கிறது. பாதுகாப்பு, கட்டுமான மேம்பாடு, காப்பீடு, ஓய்வூதியம், இதர நிதிச் சேவைகள், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள், ஒலிபரப்பு, சிவில் விமானப் போக்குவரத்து, மருந்து துறை, டிரேடிங் உள்ளிட்ட பல துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் அண்மையில் அரசு சீர்திருத்தங்களை செய்ததுபிக்-பேங் மூலதன செலவினத்திற்கு நிதியில் இடம் கிடைக்காததால், மத்திய பட்ஜெட் 2021 அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பொருளாதாரத்தில் வளர்ச்சி தூண்டுதல்களைத் அதிகப்படுத்துவதற்கும் இந்தியாவில் அதிக அந்நிய நேரடி முதலீடுகளை (Foreign Direct Investments (FDIs)) ஈர்ப்பதில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது

இது தொடர்பாக FDI இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி விஷால் யாதவ், ``மத்திய பட்ஜெட் 2021-ல், அரசாங்கம் இரண்டு புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். புதிய தொழில்துறை கொள்கை (New Industrial Policy), தேசிய -காமர்ஸ் கொள்கை (National e-commerce policy) மற்றும் தொழிலாளர் சீர்திருத்தங்களை (Introduce labour reforms) அறிமுகப்படுத்தலாம்" என்று  கூறினார்

வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இந்திய வணிகங்கள் தங்கள் வணிக வளர்ச்சியை இப்போது துரிதப்படுத்துகின்றன. ``ஒற்றை பிராண்ட் சில்லறை வர்த்தகம் (single-brand retail trading), ஒப்பந்த உற்பத்தி, நிலக்கரி சுரங்க மற்றும் டிஜிட்டல் மீடியா (contract manufacturing, coal mining, and digital media) போன்ற பல துறைகளில் மத்திய அரசு அந்நிய நேரடி முதலீட்டை தாராளமயமாக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" என்று விஷால் யாதவ் மேலும் கூறினார்.பல ஆண்டுகளாக, மூலதன செலவினங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2014-15 நிதியாண்டில் மூலதன செலவினங்களுக்கு ரூ.1.96 லட்சம் கோடியை மொத்த பட்ஜெட் ஆதரவிலிருந்து அறிவித்தது. அதுவே 20 ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் கேபெக்ஸ் செலவினம் ரூ.3.48 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதையடுத்து, 2020-21 ஆம் ஆண்டில், 2019-20 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட, அதன் மூலதனச் செலவு 18.1% அதிகரித்து ரூ. 4.12 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று அரசாங்கம் கணித்துள்ளது.

2010-11 முதல் 2020-21 வரை, மூலதனச் செலவின் ஆண்டு சராசரி வளர்ச்சி 10.2 சதவீதமாகவும், வருவாய் செலவினம் ஆண்டு சராசரி வளர்ச்சி 9.7 சதவீதமாகவும் இருந்தது. பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் பட்ஜெட்டுக்கு வெளியே நிதியளித்தல் ஆகியவற்றின் மூலம் மத்திய அரசு இவற்றிற்கு நிதியளித்து வருகிறது

மூலதன செலவினத்தில் உயர்வு (Rise in capital outlay):

எது எப்படி இருந்தாலும், தொற்றுநோய் தொடர்பான நிவாரண நடவடிக்கைகள் மற்றும் சுகாதார செலவினங்களை அதிகரிப்பது, வரி மற்றும் வரி அல்லாத வருவாய்களில் வீழ்ச்சி ஆகியவற்றால் சிதைந்துபோன நிதியத்தின் காரணமாக, மூலதன செலவினத்தில் கணிசமான அதிகரிப்பு  போன்றவை சற்று கடினமாக இருக்கலாம். இதனால் மாநிலங்களின் நிதிகளும் சமமாக பாதிக்கப்படுவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்களை அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் ஈர்க்க அதற்கான பாலிசிகள் மற்றும் முன்முயற்சிகளை ஊக்குவிக்கும் இந்த 2021-ம் ஆண்டிற்க்கான பட்ஜெட் இருக்கக்கூடும், இவ்வாறு பட்ஜெட் இருந்தால் அது நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.

வரி வசூலில் சுழற்சியின் பற்றாக்குறையை ஈடுசெய்ய வருவாய் மற்றும் மூலதனச் செலவு ஆகிய இரண்டிலும் பெரிய வெட்டுக்கள் மூலம் நிதி பற்றாக்குறையின் வரவுசெலவுத் திட்டத்தை அடைய மாநிலங்கள் முயல்கின்றன என்று இந்திய நிதி தொடர்பான தனது சமீபத்திய அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தெரிவித்துள்ளது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கி "முதலீட்டு திட்டங்களை நிறுத்தி வைப்பதற்கான கடினமான தேர்வை மாநில அரசுகள் சந்திக்க நேரிடலாம். ஆனால், மூலதன செலவினங்களுடன் தொடர்புடையவற்றை பெருக்கி கொடுக்கப்பட்டால், இது தவிர்க்க முடியாமல் வளர்ச்சி இழப்புகளை ஏற்படுத்தும்," என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு பல ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து வருகிறது

இந்த நிதியாண்டில், இந்தியாவுக்கு அந்நிய நேரடி முதலீடு 13 சதவீதம் உயர்ந்து 49.97 பில்லியன் டாலராக உள்ளது. 21-ம் நிதியாண்டில், இது ஏற்கெனவே ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 2020-க்கு இடையில் 30 பில்லியனைத் தொட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், சிங்கப்பூர் அந்நிய நேரடி முதலீட்டிற்கான 8.3 பில்லியன் டாலர் வருவாயுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா (7.12 பில்லியன் டாலர்) மற்றும் கேமன் தீவுகள் (2.10 பில்லியன் டாலர்) உள்ளன. இதுகுறித்து பேசிய விஷால் யாதவ், ``அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளிடமிருந்து FDI க்கான அதிக ஆர்வத்தை நாங்கள் கண்டிருக்கிறோம் என்று கூறினார். நிலையான வரி ஆட்சியைப் பயன்படுத்த பிரதமர் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வலுவான களத்தை வழங்குவதோடு இந்தியாவில் கவர்ச்சிகரமான அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைகளையும் ஏற்படுத்தியுள்ளார்இந்த போக்கு 2021 ஆம் ஆண்டிலும் வேகமடையக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

கவர்ச்சிகரமான துறைகள் (Attractive sectors):

இப்போதுள்ள பல துறைகளில், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் (computer software & hardware) அதிக வருவாயைப் பெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து சேவைத் துறை மற்றும் வர்த்தகத்துறையும் (service sector and trading) நல்ல வருவாயை பெற்றுள்ளதுஇதுமட்டுமல்லாமல் "சேவைகள், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, பார்மா, ஆட்டோமொபைல்கள் மற்றும் ரசாயனங்கள் (services, IT, telecom, pharma, automobiles and chemicals) ஆகியவற்றிற்கான அந்நிய நேரடி முதலீட்டை (FDI) அரசாங்கம் தளர்த்துவதால், தொடர்ந்து அன்னிய நேரடி முதலீட்டில் முன்னேற்றம் ஏற்படும்.

பாதுகாப்பு துறை (Department of Defense):

உலக அளவில் ராணுவத்துக்கான ஆயுதங்களை இறக்குமதி செய்யும் முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா ஆண்டுக்கு 800 கோடி டாலர் மதிப்புக்கு ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. முன்பெல்லாம் மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ஆண்டுதோறும் 13.4% அதிகரிக்கப்பட்டு வந்தது. இந்தாண்டும் அரசு இந்த துறைக்கு தனி கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த சில ஆண்டில் மட்டும் 190 கோடி டாலர் மதிப்புக்கு ராணுவ ஆயுதங்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இப்படி இறக்குமதி தளவாடங்களை நம்பியே இந்தியா இருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போதைய அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்வு ஏற்பட்டால் வெளிநாட்டு நிறுவனங்களும் அவற்றின் துணை நிறுவனங்களும் நேரடியாக இங்கு வந்து தொழில் தொடங்க முடியும். இதனால் இந்தியா இறக்குமதிக்கு செலவிடுவது குறையும். கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் அரசின் பொருளாதாரம் இந்தியாவுக்கு சாதகமாகமாக இருக்குமா? பாதகமாக இருக்குமா என்பது இனி வரும் காலங்களில் நமது வாழ்க்கை தர மாற்றங்களில் எதிரொலிக்கும். இந்திய பொருளாதாரத்தின் பரிசோதனை காலகட்டம் யாருக்கு பலன்தரும் என்பதைப் பார்க்க எல்லோருமே காத்திருக்கிறோம்.
Published by:Ram Sankar
First published: