புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ்க்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல்

புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ்க்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல்

ரங்கசாமி

பாஜகவுக்கு 9 தொகுதிகள் மற்றும் 1 நியமன எம்.எல்.ஏ ஒதுக்கீடு என தகவல்

  • Share this:
ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.கங்கிரஸ் கட்சியுடன் பாஜக நடத்திய பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்துவந்த நிலையில், நேற்று உறுதியானதாக தகவல்கள் வெளியாயின. 30 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடும் இறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

அதன்படி புதுச்சேரியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ்க்கு 16 தொகுதிகள் மற்றும் ஒரு நியமன எம்.எல்.ஏ; பாஜகவுக்கு 9 தொகுதிகள் மற்றும் 1 நியமன எம்.எல்.ஏ எனவும், அதிமுகவுக்கு 4 தொகுதிகள் மற்றும் 1 நியமன எம்.எல்.ஏ என்றும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்தும் முடிவு செய்யப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை 10.30 மணியவில் வெளியாக இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இதேபோல, புதுச்சேரி தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையில் இன்று உடன்பாடு எட்டப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி திமுக, காங்கிரஸ் இடையே தலா 14 தொகுதிகள் பங்கீடு செய்யப்படலாம் என்றும், கூட்டணியில் உள்ள 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 1 தொகுதி ஒதுக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் இன்று இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகின்றது.

Must Read : மநீம கூட்டணியில் சமக, ஐஜேகே கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு

 

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: