இந்திய ராணுவத்தினருக்காக ‘அயர்ன் மேன்’ கவச உடை... பகுதிநேர பணியாளரின் பலே ஐடியா..!

பின் பக்கமிருந்து தாக்கினாலும் சென்சார் மூலம் வீரர் அதை இந்த உடையின் மூலம் கண்டறிய முடியும்.

இந்திய ராணுவத்தினருக்காக ‘அயர்ன் மேன்’ கவச உடை... பகுதிநேர பணியாளரின் பலே ஐடியா..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: November 19, 2019, 2:07 PM IST
  • Share this:
வாரணாசி பல்கலைக்கழகத்தில் பகுதிநேர ஊழியராகப் பணியாற்றி வரும் ஷ்யாம் செளரசியா என்பவர் இந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்புக்காக ‘அயர்ன் மேன்’ ரக கவச உடையைத் தயாரித்துள்ளார்.

போர் காலங்களில் வீரர்கள் தங்களைப் பாதுகாக்க இந்த இரும்பு கவச உடை உதவும் என்கிறார் ஷ்யாம். மேலும் அவர் கூறுகையில், “தற்போது சிறிய அளவில் மட்டுமே இந்தக் கவச உடையைத் தயாரித்துள்ளே. போர்க் காலங்களில் அதிகப்படியான அயர்ன் மேன் கவச உடைகளை தயாரித்து அளித்தால் எதிர்களிடமிருந்து நம் வீரர்களைக் காக்க அந்த உடைகள் உதவும்.

கூடுதலாக, அந்த உடையில் மோட்டார் மற்றும் கியர்கள் வீரர்களின் பாதுகாப்புக்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. சென்சார், மொபைல் பயன்பாடு ஆகியனவும் இணைக்கப்பட்டுள்ளன. பின் பக்கமிருந்து தாக்கினாலும் சென்சார் மூலம் வீரர் அதை இந்த உடையின் மூலம் கண்டறிய முடியும்.


அரசு இதுகுறித்து அறிந்து எனக்கு உதவ வேண்டும். இதன் மூலம் நம் வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” எனக் கூறுகிறார்.

மேலும் பார்க்க: இமயமலையில் பனிச்சரிவு... சிக்கிக்கொண்ட இந்திய ராணுவ வீரர்கள்!
First published: November 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading