இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி நிறுவனம் கோர்டெலியா குரூயிஸ் நிறுவனத்துடன் இணைந்து செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் சொகுசு கப்பலை இயக்குகிறது. இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசுக் கப்பல் நிறுவனமான Waterways Leisure Tourism for marketing and promotion மூலம் கோர்டெலியா குரூயிஸ் இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வேயின் சுற்றுலா சேவைகளின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மற்றொரு ஆடம்பர பயணம் இதுவாகும்.
இந்த சொகுசு கப்பலில் பயணம் செய்பவர்கள் இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான மிக அழகான சுற்றுலா தளங்களாக கோவா, டயூ, லக்சதீப், கொச்சி, இலங்கை ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். கோவாவில் தொடங்கி மும்பை, டயூ, கொச்சி, லக்சதீப் வழியாக சென்னை வருகிறது. பின்னர் சென்னையிலிருந்து இலங்கையின் கொழும்பு, யாழ்பாணம், மட்டக்களப்பு, திரிகோணமலை செல்கிறது.
Also Read : 2 நாட்களில் இத்தனை கோடி விற்பனையா..! ஓலா சிஇஓ உற்சாகம்
கோர்டெலியா குரூயிஸில் பயணம் செய்யும்போது, உணவகங்கள், நீச்சல் குளம், பார், திறந்தவெளி சினிமா திரையரங்கம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, ஜிம்னாசியம் போன்ற ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்க முடியும்.
கொரோனா காலத்தில் பயணத்தை தொடங்குவதால், அரசு விதித்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் முழுவதும் மணிக்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படும் என்றும் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.