ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரூ536 EMI-ல் சாப்பாடு, தங்குமிடம் உட்பட 8 நாட்கள் ஆன்மீக யாத்திரை.. IRCTC ஸ்பெஷல் டூர்பேக்கேஜ்

ரூ536 EMI-ல் சாப்பாடு, தங்குமிடம் உட்பட 8 நாட்கள் ஆன்மீக யாத்திரை.. IRCTC ஸ்பெஷல் டூர்பேக்கேஜ்

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே

IRCRC - Jyotirlinga Darshan Yatra | நான்கு ஜோதிர்லிங்க தரிசன யாத்திரைக்கான டூர்பேக்கேஜின் விலை ரூ.15,150 மட்டுமே ஆகும். இருப்பினும் இதனை மேலும் எளிமையாக்கும் விதமாக ஐஆர்சிடிசி டூரிசம் இந்த டூர் பேக்கேஜை வெறும் ரூ.536 இஎம்ஐ மூலம் முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய மக்களின் விருப்பமான மற்றும் மிகப்பெரிய போக்குவரத்தான இந்தியன் ரயில்வே, சிறப்பு ரயில்களை இயக்குவது முதல் விதவிதமான டூர்பேக்ஜேகளை அறிமுகப்படுத்துவது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆன்மீக தலங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களுக்கு ஸ்பெஷல் டூர் பேக்ஜேகளை அறிமுகப்படுத்தி வரும், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC), தற்போது இஎம்ஐ ஆப்ஷன் கொண்ட புதுவித டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜோதிர்லிங்க தரிசன யாத்ரா:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிக்கைக்கான கோலாகல கொண்டாட்டம் தொடங்கப்பட உள்ளது. இதுபோன்ற பண்டிகை நாட்களில் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆன்மீக பயணம் செய்ய விரும்புவார்கள். பண்டிகை செலவு ஒருபுறம், பயணச் செலவு மறுபுறம் என நடுத்தர மக்கள் பணத்திற்காக பரிதவிக்க கூடாது என்பதற்காக இஎம்ஐ வசதியுடன் கூடிய பட்ஜெட் சுற்றுலா பேக்கேஜை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இஎம்ஐ வசதி:

ஜோதிர்லிங்க தரிசன யாத்திரை அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 22 ஆம் தேதி முடிவடைகிறது. இந்தப் பயணம் ஸ்வதேஷ் தர்ஷன் டூரிஸ்ட் ரயில் மூலம் நடைபெற உள்ளது. இந்த டூர்பேக்கேஜில் காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் சைவ உணவுவகைகள் பயணிகளுக்கு வழங்கப்படும்.

7 இரவுகள் மற்றும் 8 பகல்களைக் கொண்ட இந்த டூர் பேக்கேஜின் விலை ரூ.15,150. இந்த டூர் பேக்கேஜ் ஓம்காரேஷ்வர், மஹாகாலேஷ்வர், சோம்நாத், நாகேஷ்வர் ஜோதிர்லிங்க, பெட் துவாரகா, சிவராஜ்பூர் கடற்கரை போன்ற இடங்களை உள்ளடக்கியது. மேலும், இந்த டூர் பேக்கேஜை ரூ.536 முதல் EMIல் பெறலாம்.

பயணத்திட்டம்:

IRCTC-யின் நான்கு ஜோதிர்லிங்க தரிசன யாத்திரையின் முதல் நாள் உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் தொடங்குகிறது. இரண்டாவது நாள், காலையில் ரயில் உஜ்ஜயினி சென்றடையும். அங்கு உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்க கோயிலை தரிசக்கலாம். மூன்றாம் நாள் ஓம்காரேஷ்வ ஜோதிர்லிங்க கோவில் தரிசனம் முடித்தது, சுற்றுலா ரயில் குஜராத் நோக்கி பயணிக்கிறது.

Also Read : காஷ்மீருக்கு சுற்றுலா போகா ஆசையா! மலிவு விலையில் IRCTC வழங்கும் டூர் பேக்கேஜ்.!

நான்காவது நாளில் குஜராத்தில் உள்ள சோம்நாத் ஜோதிர்லிங்க கோவில், ஐந்தாம் நாள் துவாரகதீஷ் மற்றும் நாகேஸ்வர் ஜோதிர்லிங்க கோயிலில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு பெட் துவாரகா வழியாக ஆறாம் நாள் சிவராஜ்பூர் கடற்கரைக்கும் செல்லும் சுற்றுலா ரயிலானது, ஏழாவது நாள் மீண்டும் கோரக்பூர் வந்தடையும்.

கட்டண விவரம்:

நான்கு ஜோதிர்லிங்க தரிசன யாத்திரைக்கான டூர்பேக்கேஜின் விலை ரூ.15,150 மட்டுமே ஆகும். இருப்பினும் இதனை மேலும் எளிமையாக்கும் விதமாக ஐஆர்சிடிசி டூரிசம் இந்த டூர் பேக்கேஜை வெறும் ரூ.536 இஎம்ஐ மூலம் முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. டூர் பேக்கேஜில் தங்குமிடம், ஏசி இல்லாத வாகனத்தில் சென்று கோயில்களை சுற்றிப்பார்ப்பது, சைவ உணவுகள் மற்றும் பயணக் காப்பீடு ஆகியவை அடங்கும்.

Also Read : இனி இந்த ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இலவச உணவு - இந்தியன் ரயில்வே முடிவு

முன்பதிவு செய்வது எப்படி.?

சுற்றுப்பயணத்திற்கான டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அவற்றின் பிராந்திய வசதிகள் மையங்கள் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் எனவும் ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Indian Railways, IRCTC, Tamil News, Tourism