Home /News /national /

மலிவான கட்டணத்தில் சுற்றுப்பயணம் - 13 நாட்களுக்கான டூர் பேக்கேஜை அறிவித்துள்ள IRCTC !

மலிவான கட்டணத்தில் சுற்றுப்பயணம் - 13 நாட்களுக்கான டூர் பேக்கேஜை அறிவித்துள்ள IRCTC !

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

தென்னிந்தியாவிற்கு டூர் செல்ல விரும்பும் நாட்டின் மற்ற பகுதிகளில் குறிப்பாக டெல்லி மற்றும் சுற்றுவட்டார மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு, இந்திய ரயில்வேயின் IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) ஒரு சிறந்த சலுகையை வழங்கியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    வட இந்தியாவில் வசிக்கும் மக்கள் தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக IRCTC ஒரு டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது. ஹைதராபாத், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீசைலம் ஆகிய முக்கிய இடங்களை இந்த டூர் பேக்கேஜை தேர்வு செய்யும் மக்கள் பார்வையிடலாம்.

    IRCTC தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பேஜில் இந்த தென்னிந்திய டூர் பேக்கேஜ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த முழு சுற்று பயணமும் 12 இரவுகள் மற்றும் 13 பகல்களை (12 nights and 13 days) கொண்டதாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் IRCTC குறிப்பிட்டு உள்ளது. இந்த 13 நாள் டூர் பேக்கேஜில் 3 வேளை உணவும் (உணவுகள் மற்றும் பானங்கள்), நைட் ஸ்டே வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

    வரும் ஆகஸ்ட் 9, 2022 அன்று டெல்லியின் சஃப்தர்ஜங் (Safdarjung) ரயில் நிலையத்தில் இருந்து இந்த டூர் பேக்கேஜ் தொடங்குகிறது. பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயில் மூலம் ஆகஸ்ட் 9 முதல் 21-ம் தேதி வரை மொத்தம் 13 நாட்கள் இந்த சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஏசி மற்றும் ஏசி அல்லாத பெட்டிகளுடன் பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயிலை ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது, மேலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் இந்த டூரில் இணைவதற்கான டிக்கெட்டை புக்கிங் செய்து கொள்ளலாம்.

    டெல்லியின் சஃப்தர்ஜங், மதுரா, ஆக்ரா கான்ட், குவாலியர், ஜான்சி, பினா, போபால், இடார்சி மற்றும் நாக்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து பயணிகள் இந்த டூர் பேக்கேஜ் ஆப்பரேட் செய்யப்படும் ரயிலில் ஏறலாம் மற்றும் இறங்கலாம். இந்த பயணத்திற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.53,970 என்ற விலையில் இருந்து தொடங்குகிறது.



    இந்த டூர் பேக்கேஜின் சிறப்பம்சங்கள்...

    பேக்கேஜின் பெயர் : SOUTH INDIA TOUR BY BHARAT GAURAV TOURIST TRAIN

    டூர் மொத்தம் எத்தனை நாட்கள் - 12 இரவுகள் மற்றும் 13 பகல்கள்

    புறப்படும் தேதி - ஆகஸ்ட் 9, 2022

    உணவு ஏற்பாடுகள் - காலை, மதியம் மற்றும் இரவு (3 வேளையும்)

    போர்டிங்/டிபோர்டிங்- டெல்லி சஃப்தர்ஜங், மதுரா, ஆக்ரா கான்ட், குவாலியர், ஜான்சி, பினா, போபால், இடார்சி மற்றும் நாக்பூர் ரயில் நிலையங்கள்

    இந்த டூர் பேக்கேஜிங்கில் இணைய ஆன்லைனில் புக்கிங் செய்ய, IRCTC-யின் அதிகாரபூர்வ வெப்சைட்டான -www.irctctourism.com-ஐ பயன்படுத்தலாம். தவிர IRCTC சுற்றுலா வசதி மையம் (IRCTC Tourist Facilitation Center), மண்டல அலுவலகங்கள் (Zonal Offices) மற்றும் பிராந்திய அலுவலகங்கள் (Regional Offices) மூலமாகவும் ஆஃப்லைனில் புக்கிங் செய்யலாம்.

    இந்த பேக்கேஜில் கிடைக்கும் வசதிகள்:

    * எல்லா இடங்களிலும் ஏசி அறைகளில் தங்கும் வசதி கிடைக்கும்

    * நீங்கள் பயணிக்க கேப் அல்லது ஏசி அல்லாத பேருந்து வசதியும் கிடைக்கும்

    * அனைத்து பயணிகளும் பயணக் காப்பீட்டு வசதியை பெறுவார்கள்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: IRCTC

    அடுத்த செய்தி