IRCTC | ’இந்த தகவல்களை கொடுக்கவில்லை எனில் இனி ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யமுடியாது’- ஐஆர்சிடிசி முக்கிய அறிவிப்பு

கோவிட் காரணமாக நீண்ட காலமாக டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு ரயில்வே புதிய விதிகளை உருவாக்கியுள்ளது.

கோவிட் காரணமாக நீண்ட காலமாக டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு ரயில்வே புதிய விதிகளை உருவாக்கியுள்ளது.

  • Share this:
நீங்கள் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதாவது, ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்கள் சில தகவலைகளை கொடுத்தால் மட்டுமே ரயிலில் டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியும் என்ற புதிய விதிகளை IRCTC அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் (IRCTC) ஆன்லைன் டிக்கெட் பெரும் நபர்கள் இப்போது தங்களது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலை சரிபார்க்க வேண்டும். அதன் பிறகுதான் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். நீண்ட காலமாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் பதிவு செய்யாத பயணிகளுக்கு இந்த விதி பொருந்தும். இருப்பினும், இந்த செயல்முறை 50 முதல் 60 வினாடிகள் மட்டுமே எடுக்கும் என்று ரயில்வேதுறை அறிவித்துள்ளது.

Also Read | நெல்லை அம்பாசமுத்திரத்தின் புகழ்பெற்ற சொப்பு சாமான்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு!

இந்திய ரயில்வே வெளியிட்ட புதிய விதி:

கோவிட் காரணமாக நீண்ட காலமாக டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு ரயில்வே புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. அந்த வகையில் முதலில் IRCTC போர்ட்டலில் இருந்து டிக்கெட் வாங்க பயணிகள் தங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலை சரிபார்க்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் டிக்கெட்டைப் பெற முடியும். இருப்பினும், வழக்கமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகள் இந்த செயல்முறையை செய்ய வேண்டிய அவசியமில்லை.

புதிய விதி எவ்வாறு செயல்படுகிறது?

IRCTC இந்திய ரயில்வேயின் கீழ் ஆன்லைனில் டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது. பயணிகள் டிக்கெட்டுகளுக்காக IRCTC போர்ட்டலில் உள்நுழைந்து அவர்களுக்கான கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும். இந்த உள்நுழைவு கடவுச்சொல்லை உருவாக்க, நீங்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்க வேண்டும். அதாவது, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணை சரிபார்த்த பின்னரே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். நீண்ட காலமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் IRCTC போர்ட்டலில் உள்நுழையும் போது, ​​சரிபார்ப்பு திரை ஓபன் ஆகும். அதில் ஏற்கனவே பதிவுசெய்த மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது இடது பக்கத்தில் திருத்துவதற்கும் வலது பக்கத்தில் சரிபார்ப்பதற்கும் விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். திருத்து விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் எண்ணை அல்லது மின்னஞ்சலை நீங்கள் மாற்றலாம். சரிபார்ப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும் போது, ​​உங்கள் எண்ணுக்கு OTP (ஒன் டைம் பாஸ்வேர்ட்) அனுப்பப்படும். OTP-ஐ உள்ளிடும் போது உங்கள் மொபைல் எண் சரிபார்க்கப்படும். இதேபோல், மின்னஞ்சலுக்கும் இதேபோன்ற சரிபார்ப்பு முறை செய்யப்பட வேண்டும். பின்னர் மின்னஞ்சலில் பெறப்பட்ட OTP மூலம் இது சரிபார்க்கப்படுகிறது. பின்னர் உங்கள் டிக்கெட் பதிவு செய்யப்படும்.
Published by:Archana R
First published: