Home /News /national /

ரயில்களில் பயணிகள் வாங்கும் உணவுக்கு கட்டணம் செலுத்த க்யூஆர் கோடு பேமெண்ட் முறை அறிமுகம்

ரயில்களில் பயணிகள் வாங்கும் உணவுக்கு கட்டணம் செலுத்த க்யூஆர் கோடு பேமெண்ட் முறை அறிமுகம்

க்யூஆர் கோடு பேமெண்ட்

க்யூஆர் கோடு பேமெண்ட்

IRCTC : பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் க்யூஆர் கோடு முறையில் பணம் செலுத்தும் வசதியை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.

    ரயில்களில் அடிக்கடி தொலைதூர பயணங்களை மேற்கொள்பவரா நீங்கள்? அப்படியானால் நீங்களும் இந்த அனுபவத்தை கடந்து வந்திருப்பீர்கள். அதாவது, ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் உணவு மற்றும் பானங்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.

    உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையை எடுத்துச் செய்யும் ஒப்பந்ததாரர்கள் சிலர் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பது குறித்து அவ்வபோது புகார்கள் எழுவது வழக்கம். இந்நிலையில், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் க்யூஆர் கோடு முறையில் பணம் செலுத்தும் வசதியை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.

    தற்போதைய சூழலில் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே இந்த வசதி அமலில் உள்ளது. இதையே அனைத்து ரயில் வழித்தடங்களிலும் விரிவாக்கம் செய்ய ஐஆர்சிடிசி நடவடிக்கை எடுத்துள்ளது. சதாப்தி, தேஜாஸ், துரந்தோ மற்றும் ராஜ்தானி போன்ற ப்ரீமியம் வகை ரயில்களில் உங்கள் டிக்கெட் முன்பதிவுடன் சேர்த்து உணவு மற்றும் பானங்களுக்கான கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது.

    ஆனால், மற்ற ரயில்களில் பயணிகள் தங்கள் பயணத்தின்போது பணம் செலுத்தி உணவுகளை வாங்கிக் கொள்ள வேண்டும். சமையல் அறை இல்லாத சில ரயில்களில் ஐஆர்சிடிசி உரிமம் பெற்ற வியாபாரிகள் உணவு விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற வியாபாரிகள் தான் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்கின்றனர் என்று ஐஆர்சிடிசி நிறுவனத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன.

    ALSO READ | குஜராத்தை அடுத்து உ.பியில் புதிதாக 108 உயர அனுமன் சிலை... 2 ஆண்டுகளில் பணிகள் முடிவுக்கு வரும் என அறிவிப்பு!

    பயணிகள் ரயிலில் கார்டு ஸ்வை செய்து கட்டணம் செலுத்துவதற்கான முறை ஏற்கனவே அமலில் இருக்கிறது என்றாலும் கூட, பல பயணிகள் அந்த வசதியை பயன்படுத்தாமல் நேரடியாக பணம் செலுத்துகின்றனர். இத்தகைய சூழலில் தற்போது க்யூஆர் கோடு பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படுகிறது. உணவுப் பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க இந்த முறை உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    மெனு கார்டில் பிரிண்டிங் செய்யப்படும் : பயணிகளுக்கு ஐஆர்சிடிசி வழங்கும் மெனு கார்டு மீது க்யூஆர் கோடு பிரிண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஐஆர்சிடிசி வியாபாரிகளின் ஐடி கார்டுகளிலும் இந்த க்யூஆர் கோடு இடம்பெற்றிருக்கும். பயணிகள் இந்த க்யூஆர் கோட்-ஐ தங்களின் யூபிஐ ஆப்களில் ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.

    சாத்வீக உணவுகள் வழங்க ஒப்பந்தம் : ரயில் பயணிகளுக்கு சாத்வீக உணவுகளை வழங்குவது தொடர்பாக, டெல்லியில் உள்ள இஸ்கான் கோவில் நிர்வாகம் நடத்தும் கோவிந்தா ரெஸ்டாரண்ட் உடன் ஐஆர்சிடிசி கடந்த மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்தத் திட்டம் முதன் முதலாக டெல்லி ஹஸ்ரத் நிஜாமுகிதின் ரயில் நிலையத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து மற்ற ரயில் நிலையங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

    சாத்வீக உணவுப் பட்டியலில் டீலக்ஸ் சாப்பாடு, மகாராஜா சாப்பாடு, வெஜிடபிள் பிரியாணி, நூடுல்ஸ் உள்ளிட்ட உணவு வகைகள் இடம்பெற்றிருக்கும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: IRCTC

    அடுத்த செய்தி