ஹோம் /நியூஸ் /இந்தியா /

IRCTC அடுத்த அதிரடி... மருத்துவ சுற்றுலா தொகுப்பு.. எப்படி பெறுவது.? கட்டண விவரங்கள் இதோ.! 

IRCTC அடுத்த அதிரடி... மருத்துவ சுற்றுலா தொகுப்பு.. எப்படி பெறுவது.? கட்டண விவரங்கள் இதோ.! 

IRCTC

IRCTC

IRCTC Medical Tourism Services | இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) சமீபத்தில் தனது பயணிகளுக்காக ஆன்லைன் மருத்துவ சுற்றுலா தொகுப்புகளை தொடங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா மக்களின் விருப்பமான மற்றும் மிகப்பெரிய போக்குவரத்தான இந்தியன் ரயில்வே, சிறப்பு ரயில்களை இயக்குவது முதல் விதவிதமான டூர்பேக்ஜேகளை அறிமுகப்படுத்துவது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது பயணிகளின் பயணம் மற்றும் சுற்றுலா அனுபவத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தும் விதமாக, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) சமீபத்தில் தனது பயணிகளுக்காக ஆன்லைன் மருத்துவ சுற்றுலா தொகுப்புகளை தொடங்கியுள்ளது.

பயணத்தின் போது பயணிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கவும், பயணிகளுக்குத் தேவையான மருத்துவம், மற்றும் அறுவைசிகிச்சை சிகிச்சைகளை அளிக்கவும் ஐஆர்சிடிசி இந்த புதிய நடைமுறையைக் கையில் எடுத்துள்ளது. இதற்காக மருத்துவ மற்றும் தொழில்நுட்ப ஆன்லைன் சேவை நிறுவனங்களுடன் கைகோர்த்து, முழுமையான மருத்துவ சேவையை பட்ஜெட் விலையில் வழங்க உள்ளது.

தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடிய மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் மற்றும் பரிசோதனை மையங்கள் ஆகியவை அடங்கிய நெட்வொர்க்குடன், பயணிகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஹெல்த் பேக்கேஜ்களை வழகுவதற்காக ‘ஆன்லைன் மருத்துவ சுற்றுலா பேக்கேஜ்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பேக்கேஜ் குறித்து பல்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் ரயில்வே அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான முறையான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

மருத்துவ சுற்றுலா சேவை தொகுப்புகள்:

- கார்டியாக் பைபாஸ்-ரூ.1,00,000

- மார்பக அறுவை சிகிச்சை-ரூ.50,000 முதல் தொடக்கம்.

- சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை- ரூ.1,50,000 முதல் தொடக்கம்.

- கிரினோடமி- ரூ.85,000 முதல் தொடக்கம்.

- ஸ்டீரியோடாக்டிக் கதிரியக்க அறுவை சிகிச்சை-ரூ.1,50,000 முதல் தொடங்குகிறது.

- கீமோதெரபி தொகுப்பு-ரூ.5,000 முதல் தொடங்குகிறது.

- தன்னியக்க ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை-5,00,000  முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - 65,000 முதல் தொடங்குகிறது.

புரோஸ்டேட் அறுவை சிகிச்சை- ரூ.50,000 முதல் தொடங்குகிறது.  லேப்ராஸ்கோபிக் கருப்பை நீக்கம்/வெரிதைம்ஸ்/ரேடிகல்- 75,000  லேசிக் (லேசர் சிகிச்சை மூலம் கருவிழி திருத்தம்) (இரு கண்களும்)- 40,000 இலிருந்து தொடங்குகிறது.

Also Read : இனி இந்த ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இலவச உணவு - இந்தியன் ரயில்வே முடிவு

மருத்துவ சுற்றுலாவை முன்பதிவு செய்வது எப்படி?

- மருத்துவ சுற்றுலா சேவைகளைப் பெற, வாடிக்கையாளர்கள் IRCTC இன் சுற்றுலா போர்ட்டலில் லாகின் செய்ய வேண்டும். 'www.irctctourism/MedicalTourism' என்ற தளத்திற்குள் நுழைந்த பிறகு, என்ன மாதிரியான சிகிச்சை தேவை, பயணிகள் உடல் நல பிரச்சனை குறித்த அடிப்படை தகவல்கள் ஆகியவற்றை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

- இதனையடுத்து IRCTC குழு சம்பந்தப்பட்ட பயணியைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்குத் தேவையான வசதி மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப நோய்க்கான சிகிச்சை விருப்பங்களை விளக்குவார்கள். இதன் மூலம் பயணிகள் தங்களது தேவையான மருத்துவ சுற்றுலா பேக்கேஜை தேர்ந்தெடுக்க முடியும்.

மருத்துவ சுற்றுலாவிற்கான காரணம்:

உலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் மருத்துவத்திற்காக இந்தியா வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதேபோல் இந்திய மக்களும் பல்வேறு சிகிச்சைக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே நோயாளிகளுக்கு தனித்துவமான அனுபவம் மற்றும் கவனிப்பை வழங்கும் விதமாக இந்த ஸ்பெஷல் பேக்கேஜை ஐஆர்டிசி அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Also Read : காஷ்மீருக்கு சுற்றுலா போகா ஆசையா! மலிவு விலையில் IRCTC வழங்கும் டூர் பேக்கேஜ்.! 

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் (ஐஐபிஏ) தரவுகளின்படி, மருத்துவ சிகிச்சைக்காக 2019 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 6.97 லட்சம் பேர் மருத்துவ சுற்றுலாப் பயணிகளாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்குள், உலகளாவிய மருத்துவ சுற்றுலா சந்தையில் 6 சதவீதத்தை இந்தியா பிடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: India, Indian Railways, IRCTC, Tourism