Home /News /national /

தென்னிந்திய சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஐஆர்சிடிசி.! விவரங்கள்..

தென்னிந்திய சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஐஆர்சிடிசி.! விவரங்கள்..

மதுரை

மதுரை

IRCTC South India Tour Package | ராமேஸ்வரம், மதுரை மற்றும் கேரள பகுதிகளுடன் இணைந்த இந்த சுற்றுலா திட்டமானது 7 இரவுகள் மற்றும் 8 பகல்களை கொண்டது ஆகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தென்னிந்தியாவிற்கான சிறப்பு சுற்றுலா திட்டம் ஒன்றை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி, கொச்சி, குமரகோம், மதுரை, மூணாறு, ராமேஸ்வரம், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்க்கலாம். ராமேஸ்வரம், மதுரை மற்றும் கேரள பகுதிகளுடன் இணைந்த இந்த சுற்றுலா திட்டமானது 7 இரவுகள் மற்றும் 8 பகல்களை கொண்டது ஆகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீ கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் தரிசனம் செய்யலாம். இந்த சுற்றுலா திட்டமானது ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. இதை தொடர்ந்து மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், குமரகோனம், மூணாறு, கொச்சி, ஜெய்ப்பூர் என்ற வரிசையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் தங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

என்னென்ன சேவைகள் கிடைக்கும்

சுற்றுலாப் பயணிகளுக்கான காலை உணவு, இரவு உணவு மற்றும் விடுதியில் தங்குவது, பயண செலவு ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும். இது மட்டுமல்லாமல், பயணத்தில் ரிட்டர்ன் விமான பயண கட்டணம் ஜெய்ப்பூர் - மதுரை, கொச்சி - ஜெய்ப்பூர் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளது.



3 ஸ்டார் ஹோட்டல்கள் அல்லது அதற்கு ஈடான இடங்களில் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும். விமான நிலையங்களுக்கு ஏசி வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவார்கள். சுற்றுலா இடங்களை பார்வையிடுவதற்கு பகிர்வு அடிப்படையில் ஏசி வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

உணவு அட்டவணையில் 7 தினங்களுக்கான காலை உணவுகள், மதிய உணவு மற்றும் 7 தினங்களுக்கான இரவு உணவு ஆகியவை அடங்கும்.

Also Read : IRCTC ட்ரிக்ஸ் : தட்கல் டிக்கெட்டை இப்படி புக் செய்தால் உடனே கன்ஃபார்ம் டிக்கெட்டாக மாறும்

எவ்வளவு கட்டணம்

ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.49,550 வசூல் செய்யப்படும். இது ஜிஎஸ்டி வரி உள்ளடக்கியதாகும். இந்த பயண திட்டத்தில் வரலாற்று நினைவுச் சின்னங்களை பார்வையிடுவதற்கான நுழைவு கட்டணங்கள் அல்லது வேறு விதமான நுழைவு கட்டணங்கள், எஸ்கார்ட் சேவைகள், சுற்றுலா வழிகாட்டி சேவைகள், பட்டியலிடப்பட்டதைக் காட்டிலும் கூடுதலான உணவுகள், சுற்றுலா இடங்களை பார்வையிடல் போன்ற செலவுகள் சேர்க்கப்பட மாட்டாது.



பயண திட்ட விவரங்கள்

சுற்றுலா திட்டத்தின் பெயர் - ராமேஸ்வரம், மதுரை மற்றும் கேரள பகுதிகள், ரயில் எண் என்ஜேஏ06.

பயண சேவை - விமானம் மூலமாக, இண்டிகோ விமானச் சேவை இணைக்கப்பட்டுள்ளது.

Also Read : IRCTC ரயில்களில் இனி இதற்கு தடை... புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியீடு.! 

புறப்படும் நாள் - செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி, இது மட்டுமல்லாமல் இதே சேவையானது 12 அக்டோபர், 7 நவம்பர், 19 டிசம்பர், 26 டிசம்பர் ஆகிய தேதிகளிலும், அடுத்த ஆண்டில் 16 ஜனவரி, 16 பிப்ரவரி ஆகிய நாட்களிலும் கிடைக்கும்.

ஆர்வம் உள்ள பயணிகள் ஐஆர்சிடிசி-யின் சுற்றுலா சேவை மையங்கள், மண்டல அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள் போன்றவற்றின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Published by:Selvi M
First published:

Tags: IRCTC, South India, Tour

அடுத்த செய்தி