பிப்ரவரி 14ம் தேதி முதல் அனைத்து ரயில்களிலும் கேட்டரிங் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் கணிசமாக குறைந்து வரும் நிலையில், கேட்டரிங் சேவையை மீண்டும் தொடங்குகிறது ஐ.ஆர்.சி.டி.சி. இருப்பினும், கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு உணவுகள் வழங்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் கூறியுள்ளது.
இதையும் படிங்க - Karnataka Hijab row:ஹிஜாப் விவகாரத்தில்அடிப்படை உரிமை காக்கப்படும்: உச்ச நீதிமன்றம்
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. 2020 மார்ச் மாதத்தில் பாதிப்பு உக்கிரம் அடைந்ததால், அப்போது நாடு ழுமுவதும் லாக்டவுண் போடப்பட்டு பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டன.
அந்த வகையில் ரயில்களில் ஐஆர்சிடிசி கேட்டரிங் சேவையும் நிறுத்தப்பட்டன. கொரோனா குறைந்ததும் சில மாதங்களுக்கு முன்பாக நாடு முழுவதும் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. அப்போது ஐ.ஆர்.சி.டி.சி. கேட்டரிங் சேவை இல்லாததால் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையும் படிங்க -
கொரோனா 3வது அலை : டெல்லியில் முதன்முறையாக ஒருநாள் பாதிப்பு 1000-க்கும் குறைவாக பதிவு
கடந்த ஆண்டு இறுதியில் ப்ரீமியம் ரயில்களான ராஜதானி, சதாப்தி, டுராண்டோ ஆகிய ரயில்கள் கேட்டரிங் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 14-ம்தேதி முதல் அனைத்து ரயில்களிலும் கேட்டரிங் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 58,077 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் குறைந்து 50,407 ஆக தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 6,10,443 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,36,962 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குணமடைவோர் விகிதம் 97.37 சதவீதமாக உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.