• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி விடுவிப்பு... தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி விடுவிப்பு... தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு

கிரண் பேடி - தமிழிசை சௌந்தரராஜன்

கிரண் பேடி - தமிழிசை சௌந்தரராஜன்

கிரண் பேடி ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது தங்களுக்கு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி விடுவிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமித்து அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரியில் அரசு பணிகளை செய்யவிடாமல் தொடர்ந்து அதற்கு முட்டுக்கட்டையாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி இருப்பதாக முதல்வர் நாராணயணசாமி தெரிவித்து வந்தார். கிரண் பேடியை துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த இவர் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் புகார் மனுவையும் கொடுத்திருந்தார்.

    இதனிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வந்ததால் புதுச்சேரியில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. 33 உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலம், சபாநாயகர் சிவக்கொழுந்துவுடன் சேர்த்து 14 ஆக குறைந்துள்ளது.

    அதே சமயம், 3 நியமன எம்.எல்.ஏக்கள் உடன் சேர்த்து என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 14 ஆக உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சபாநாயகர் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், காங்கிரசின் ஆட்சி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பை ஏற்பார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.



    கிரண் பேடி ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது தங்களுக்கு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: