• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவில் ஏற்படப்போகும் பாதிப்புகள்- ஐ.பி.சி.சி அறிக்கையில் கூறியிருப்பது என்ன?

இந்தியாவில் ஏற்படப்போகும் பாதிப்புகள்- ஐ.பி.சி.சி அறிக்கையில் கூறியிருப்பது என்ன?

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம்

கடல் மட்டம் உயர்வு, புயல்களால் ஏற்படும் வெள்ளப் பாதிப்பு, சீரற்ற பருவமழை, கடுமையான வெப்ப அழுத்தம் ஆகியவை  சமீப காலத்தில் இந்தியாவை பாதிக்கக்கூடும் என்று ஐ.பி.சி.சி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் வரும் காலங்களில் அனல் காற்று, வறட்சி, அதிகமழை, புயல் பாதிப்பு ஆகியவை அதிகரித்து காணப்படும் என ஐ.பி.சி.சி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலகம் காலநிலை மாற்றத்தால் பல்வேறு பாதிப்புகளை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறது. வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. ஆசிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் மழைகளையும்  புயல்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில், காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவான ஐ.பி.சி.சி (IPCC)  தனது ஆய்வு அறிக்கையை இன்று ஜெனிவாவில் தாக்கல் செய்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Climate Change 2021: the Physical Science Basis எனப் பெயரிடப்பட்ட அந்த  அறிக்கையில் மனிதர்களின் செயலால் வருங்காலத்தில் புவி எதிர்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து அச்சமூட்டும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா மற்றும் அதன் துணை கண்டங்கள் குறித்து அறிக்கையில்,  1850-1900 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது தற்போது வெப்பநிலை அதிகரித்திருப்பது தெளிவாக தெரிவதாக கூறப்பட்டுள்ளது. குளிரின் தீவிரம் குறைந்துள்ள அதேவேளையில், வெப்பத்தின் தீவிரம் அதிகரித்துள்ளது. வரும் தசபங்களிலும் இந்த நிலை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆசியாவின் பெரும்பகுதியில் சராசரி மற்றும் அதிக மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் வறட்சிகளும் இந்திய துணைக் கண்டனத்தில் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: 2050ல் கிடையாது, 2030லேயே பூமிக்கு ஆபத்து தான் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

    மனிதர்களின் செயலால் தான் வெப்பமயமாதல் அதிகரித்துள்ளது என்பது தற்போது நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மாற்றம் நிறுவனத்தின் இணை இயக்குநரும் அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான  டாக்டர் ஃப்ரைடெரிக் ஓட்டோ கூறியுள்ளார்.  அனல் காற்று,  அதீத மழை, பஞ்சம் ஆகியவற்றை நாம் பார்த்து வருகிறோம். இதில் சில மாற்றங்களை நம்மால் சரி செய்ய முடியாது. வெப்பநிலையை1.5 டிகிரி செல்சியஸாக கட்டுப்படுத்தினாலும், இத்தகைய தீவிர வானிலை மாற்றங்களை நாம் பார்க்கத்தான் வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும் படிக்க: க்ரீஸ் நாட்டில் 6-வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ- திணரும் தீயணைப்பு வீரர்கள்


    இந்து குஷ் இமயமலையில் பனிப்பாறைகளில் ஏற்படும் பாதிப்பு,  கடல் மட்டம் உயர்வு, புயல்களால் ஏற்படும் வெள்ளப் பாதிப்பு, சீரற்ற பருவமழை, கடுமையான வெப்ப அழுத்தம் ஆகியவை  சமீப காலத்தில் இந்தியாவை பாதிக்கக்கூடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பமயமாதல், அதீத மலை காரணமாக பனி ஏரிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் நிலச்சரிவுகள் ஏற்படுவதும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலை உள்ளடக்கிய இந்திய பெருங்கடல் பூமியின் சராசரியை விட வேகமாக வெப்பமாகி வருவதாகவும்,  கடற்கரையோர பகுதிகளில் கடல்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் ஐ.பி.சி.சி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: