Home /News /national /

2050ல் கிடையாது, 2030லேயே பூமிக்கு ஆபத்து தான் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

2050ல் கிடையாது, 2030லேயே பூமிக்கு ஆபத்து தான் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

global warming

global warming

கடல்மட்ட அளவு குறைந்தபட்ச அளவில் 55 செமீ ஆகவும், அதிகபட்ச அளவில் 76 செமீ ஆகவும் உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை, மும்பை போன்ற கடலோர நகரங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

2050 ஆண்டுக்கு பிறகு தான் புவியின் வெப்பம் 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸ் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது உள்ள சூழலில் 2030 ஆண்டில் இருந்தே புவி வெப்பமடைதல் அதிகரிக்கும் என IPCC எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இனி பல்வேறு பேரிடர்கள் ஏற்படும் எனவும் புயல் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2040ம் ஆண்டுக்குள் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 சதவீதம் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் உலக நாடுகள் பெரும் முயற்சி எடுத்து பருவநிலையை பேணும் முயற்சிகளை ஒன்றாக மேற்கொண்டால், 2100ம் ஆண்டுவாக்கில் இந்த 1.5 சதவீத வெப்பநிலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக தெற்காசியாவில் அதிக வெப்பநிலை, இயற்கை பேரிடர்கள், காட்டுத்தீ, புயல், வெள்ளம் போன்றவை இந்த நூற்றாண்டில் சாதாரண ஒன்றாக மாறிவிடும். இமாலய பனிமலையில் அதிகளவில் பனிக்கட்டிகள் உறையும் இதன் காரணமாக வரும் பத்தாண்டுகளில் ஆறுகளில் நீரோட்டம் அதிகரிக்கும். இமயமலையை ஒட்டிய மாநிலங்களில் பனிமலை வெடிப்புகள், பனிக்கட்டி சரிவுகள் அதிகம் ஏற்படும்.

Also Read: கண்ணீருடன் விடைபெற்றார் மெஸ்ஸி.. முடிவுக்கு வந்த 21 ஆண்டுகால பயணம்!

கடல்மட்ட அளவு குறைந்தபட்ச அளவில் 55 செமீ ஆகவும், அதிகபட்ச அளவில் 76 செமீ ஆகவும் உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை, மும்பை போன்ற கடலோர நகரங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலின் வெப்பநிலையானது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருக்கிறது.

global warming


IPCC என்றால் என்ன? அதன் செயல்பாடு..

காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு என்பது பல்வேறு அறிவியலாளர்களை கொண்ட ஒரு குழுவாகும். இந்த ஐ.பி.சி.சி. அமைப்பானது 1988ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் உலக வானிலை அமைப்பால் இணைந்து உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் என்பது உலக நாடுகளுக்கு காலநிலை மாற்றம் குறித்த கொள்கையை உருவாக்குவதற்கான அறிவியல் பூர்வ தகவல்களை அளிப்பதாகும்.

Also Read:  ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை தலையணைக்குள் வைத்து தூங்கினேன் – நீரஜ் சோப்ரா ஷேரிங்க்ஸ்

பன்னாட்டு அளவில் காலநிலை மாற்றம் குறித்த உரையாடல்களுக்கு முக்கியமான கருவியாக ஐ பி சி சி தயாரித்து வெளியிடும் அறிக்கைகள் விளங்குகின்றன. இந்த அமைப்பில் தற்போது 195 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பானது தன்னிச்சையாக ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாது. பல்வேறு நாடுகளில் உள்ள அறிவியலாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளை குழு அமைத்து ஆராய்ந்து அதன் மூலம் காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள், தாக்கங்கள், எதிர்கால ஆபத்துகள், தடுப்பு மற்றும் மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கைகளாக வெளியிடுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வானிலை அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் தங்கள் காலநிலை விஞ்ஞானிகளின் பெயர்களை சமர்ப்பிப்பார்கள். இப்பட்டியலில் இருந்து ஐபிசிசியின் தலைமைக்குழு குறிப்பிட்ட அளவிலான விஞ்ஞானிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பணிக் குழுவை ஒதுக்கும். ஐ.பி.சி.சி. அமைப்பானது மூன்று பணிக்குழுக்கள் மற்றும் ஒரு செயற் குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் பணிக் குழுவானது காலநிலை மாற்றத்தை உண்டாக்கும் இயற்பியல் அறிவியலின் அடிப்படை குறித்து ஆராய்கிறது. இரண்டாவது பணிக் குழுவானது காலநிலை மாற்றத்தின் தாக்கம் மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பாதிப்பு குறித்தும் மூன்றாவது பணிக்குழு காலநிலை மாற்றத்திற்கு தகவமைத்துக் கொள்வது குறித்தும் ஆராய்கிறது. செயற் குழுவின் முக்கிய நோக்கமாக பசுமை இல்ல வாயு குறித்த ஆய்வு மற்றும் அதனை நீக்குவது அமைந்துள்ளது.

Also Read:  Taliban vs Afghan Forces | ஆப்கன் அரசுப் படைகளை விட தலிபான்கள் எந்த வகையில் பலம் வாய்ந்தவர்கள்?

இந்த அடிப்படையில் ஐபிசிசி ஆனது இதுவரை 5 மதிப்பீட்டு அறிக்கைகளை (Assesment Report) தயாரித்து வெளியிட்டுள்ளது.
முதல் மதிப்பீட்டு அறிக்கை ( FAR)
1990ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த முதல் மதிப்பீட்டு அறிக்கையானது காலநிலை மாற்றத்தின் பின்னணியில் உள்ள அறிவியல் குறித்த ஒரு பரந்த கண்ணோட்டத்தை வழங்கியது. மேலும் உலக வெப்பமயமாதலின் ஆதாரங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மை குறித்தும் இவ்வறிக்கையில் பேசப்பட்டு இருந்தது.

இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கை ( SAR)
1995ஆம் ஆண்டு வெளியான இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கையானது உலக அளவில் காலநிலை மாற்றத்தில் தெளிவாக கண்டறியக் கூடிய அளவில் மனித செயல்பாடுகளும் காரணமாக இருக்கலாம் என தெரிவித்தது.

மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கை (TAR)
2001ஆம் ஆண்டு வெளியான மூன்றாவது அறிக்கை கடந்த 50 ஆண்டுகளில் உலகம் சந்தித்த வெப்பநிலை உயர்வுக்கு மனிதச் செயல்பாடுகளே காரணம் என்பதற்கான புதிய மற்றும் வலுவான ஆதாரங்களை முன்வைத்தது.

Also Read:  ரவி தாஹியாவின் ஒலிம்பிக் பதக்கத்தால் திகார் சிறையில் உணர்ச்சிவசப்பட்ட சுஷில் குமார்..

நான்காவது மதிப்பீட்டு அறிக்கை (AR4)
2007ஆம் ஆண்டு வெளியான இந்த அறிக்கையில் உலகளவில் சராசரி காற்று மற்றும் கடல் வெப்பநிலை உயர்வு, பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர் மட்டம் உயருதல் போன்றவற்றை கண்காணித்ததிம் அடிப்படையில் உலக வெப்பமயமாதல் என்பது சந்ததேகத்திற்கிடமின்றி தெளிவாகியதாக கூறப்பட்டிருந்தது.

ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கை (AR5)
2014ஆம் ஆண்டு வெளியான இந்த அறிக்கையில் அனைத்து கண்டங்கள் மற்றும் கடல்களில் காலநிலை அமைப்பில் மனிதச் செயல்பாடுகளின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 95% மனிதர்கள் மட்டுமே உலக வெப்பமயமாதலுக்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தற்போது ஐ.பி.சி.சி. தனது ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் காலத்தில் உள்ளது. இந்த ஆறாவது அறிக்கை காலமான 2015 முதல் 2023ல் மொத்தமாக 8 அறிக்கைகள் வெளியிடப்படும். ஏற்கெனவே இதில் 4 அறிக்கைகள் வெளியிடப்பட்டு விட்டன.
தற்போது ஐ.பி.சி.சியின் முதல் பணிக்குழு காலநிலை மாற்றத்தின் பின்னணியில் உள்ள அறிவியல் குறித்த தனது அறிக்கையை வழங்கியுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Climate change, Flood, News On Instagram

அடுத்த செய்தி