• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காற்று மாசு சிக்கலை தீர்க்க யோசித்த இளைஞர் - கார்பன் துகள்களை ஃப்ளோர் டைல்ஸ்களாக மாற்ற முயற்சி!

காற்று மாசு சிக்கலை தீர்க்க யோசித்த இளைஞர் - கார்பன் துகள்களை ஃப்ளோர் டைல்ஸ்களாக மாற்ற முயற்சி!

ANgad dharyani

ANgad dharyani

காற்று மாசை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், மும்பையைச் 23 வயதான இளைஞர் அங்கத் தர்யானி (Angad Daryani) ஒரு தீர்வை நோக்கி சிறப்பான அடியை எடுத்து வைத்து இருக்கிறார்.

  • Share this:
உலகம் முழுவதும் காற்று மாசுபாடு எவ்வளவு அதிகரித்து வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். இதற்கு சரியான தீர்வை நோக்கி பல நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. இந்தியாவை பொறுத்த வரை தலைநகர் டெல்லியின் காற்று மாசுபாடு மிகவும் கவலை அளிக்க கூடியது. இதன் காரணமாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க டெல்லி அரசு தடை விதித்து இருக்கிறது. டெல்லி மட்டுமின்றி நாட்டின் பல்வேறு நகரங்களில் ஏற்பட்டுள்ள காற்று மாசை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், மும்பையைச் 23 வயதான இளைஞர் அங்கத் தர்யானி (Angad Daryani) ஒரு தீர்வை நோக்கி சிறப்பான அடியை எடுத்து வைத்து இருக்கிறார்.

அங்கத் தர்யானியை பொறுத்த வரை காற்று மாசு பிரச்சனை எப்போதும் தனிப்பட்டதாக உள்ளது. ஏனென்றால் அவருக்கு ஆஸ்துமா இருந்தது. ஒவ்வொரு ஆண்டின் தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு புகையால் ஏற்படும் காற்று மாசு பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள என்னை என் பெற்றோர்கள் மும்பையை விட்டு வெளியே அழைத்து சென்று விடுவார்கள் என்று கூறியுள்ளார். அசுத்தமான காற்றை சுவாசிப்பதால் அடிக்கடி தனக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்து கொண்டிருந்த போது, அவருக்கு ​​சுத்தமான காற்று உள்ள ஒரு நாட்டிற்கு தான் வந்துள்ளது போல இந்தியாவில் நிலவும் காற்று மாசு பிரச்சனையைத் தீர்ப்பது எளிதல்ல என்பதை உணர்ந்துள்ளார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த எளிதில் பயன்படுத்தக்கூடிய ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க ஆர்வம் கொண்டார். இதற்கு முதல் படியாக ஒரு பகுதி அல்லது மண்டலத்தை காற்று மாசின்றி தூய்மைப்படுத்துவதே நோக்கி இவரது யோசனை நகர்ந்தது.

Also Read:  டாடா தயாரித்து வழங்கும் Airbus C295 ரக ஏர் லிஃப்டர் விமானங்களின் சிறப்புகள்!

இதன் மூலம் இவரது பிரான் (Praan) யோசனை செயல் வடிவம் பெற துவங்கியது. இவரது யோசனையான Praan திட்டம் சிலிக்கான்வேலியில் உள்ள பல நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 50 பொறியாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் சுமார் 50 நகரங்களில் வாழும் ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் உருவானது. இந்த திட்டத்தின் கீழ் Mach One அல்லது MK 1 என்று குறிப்பிடப்படும் காற்றை தூய்மை படுத்தும் கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்பு அடிப்படை மட்டத்தில் காற்று மாசுபாட்டின் பிரச்சனையை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அங்கத் தர்யானி. புகை, தூசி துகள்கள், கட்டிடங்களிலிருக்கும் பெயிண்ட், நகரங்களில் நடக்கும் கட்டுமான பணிகள், அளவில்லா வாகன போக்குவரத்து, டீசல் ஜெனரேட்டர்கள், இயற்கையாக நிகழும் துகள்கள் என பல காரணிகள் காற்று மாசுபாட்டின் அடிப்படையாக இருக்கிறது. தற்போதுள்ள மார்க்கெட்டில் இருக்கும் காற்று சுத்திகரிப்பு உள்கட்டமைப்பு மிகவும் காஸ்ட்லி. மேலும் பலர் துகள்களை சுத்தம் செய்ய ஃபில்டர்களை பயன்படுத்துகிறார்கள்.

Also Read:  மனைவியை தினமும் குளிக்க சொன்னால் சண்டை போடுகிறார் – விவாகரத்து கோரும் கணவர்!

ஆனால் இவரது சாதனங்கள் சமீபத்திய ஐபோனை விட குறைவான விலையை கொண்டது, அதே நேரத்தில் நிமிடத்திற்கு 300 கன அடி காற்றை வடிகட்டுகிறது. இந்தியா முழுவதும் ஒரு பைலட் திட்டத்தை செயல்படுத்த பள்ளிகள், ஹோட்டல்கள் மற்றும் தொழில்துறை திட்டங்களில் தனது சாதனத்தை பயன்படுத்தி பார்க்க வைக்க தர்யானி திட்டமிட்டுள்ளார். மாசுபட்ட காற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சமூகத்தில் பெரும்பாலும் வசதி குறைவுள்ளவர்களாக இருப்பதால், இவரது டிவைஸின் விலையை குறைவாக வைத்திருப்பது அவசியம் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார்.

Also Read:   ஆட்டோ ஓட்டுநரை பழிவாங்க 22 கிமீ பயணம் செய்து வந்த குரங்கு – ஒரு திகில் அனுபவம்!

தனது ஏர் ப்யூரிஃபையரின் collection chamber-ஐ 6 மாதங்களுக்கு மாற்ற வேண்டியதிருக்காது என்பதால் செலவு குறையும் என்றும் விளக்கமளித்துள்ளார். தவிர தனது டிவைஸில் இருக்கும் ஃபில்டரில் சிக்கும் கார்பன் துகள்களை, இந்தியாவை தளமாகக் கொண்ட மற்றொரு நிறுவனமான கார்பன் கிராஃப்ட் டிசைனுக்கு அனுப்ப உள்ளதாக கூறுகிறார். இது கார்பன் துகள்களை ஃப்ளோர் டைல்ஸ்களாக மாற்றும் நிறுவனம் ஆகும். 1 கார்பன் ஃப்ளோர் டைல், வளிமண்டலத்திற்கு செல்லும் சுமார் 5 கிலோ கார்பன் டை ஆக்சைடுக்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: