கொரோனாவில் இருந்து பாதுகாக்க 4 அடுக்குகளுடன் ஜியோமி Mi KN95 மாஸ்க் அறிமுகம்

ஜியோமி நிறுவனம் 4 அடுக்கு பாதுகாப்பு கொண்ட புதிய மாஸ்க் ஒன்றை தயாரித்துள்ளது. அதன் சிறப்பம்சங்களை பற்றி இங்கு காண்போம்.

கொரோனாவில் இருந்து பாதுகாக்க 4 அடுக்குகளுடன் ஜியோமி Mi KN95 மாஸ்க் அறிமுகம்
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் மாஸ்க்கின் அவசியத்தை நன்கு உணர்ந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகளும் மக்களை மாஸ்க் அணிந்து வெளியே வரும்படி அறிவுறுத்தி வருகிறது. மாஸ்க் அணிவதை கடமையாக்கிக் கொள்ளாமல் அதை வழக்கமாக்கிக் கொள்வது அவசியம். மாஸ்க்கில் பல வகைகள் உள்ள நிலையில், எந்த மாஸ்க் எப்படி பயன்படுத்த வேண்டும், அதில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன,  யாரெல்லாம் மாஸ்க் பயன்படுத்த வேண்டும் என்ற பல விஷயங்கள் உள்ளது.

நாம் அதை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது மிகவும் முக்கியம். அந்த வகையில் ஜியோமி 4 அடுக்கு பாதுகாப்பு கொண்ட புதிய மாஸ்க் ஒன்றை தயாரித்துள்ளது. அதன் சிறப்பம்சங்களை பற்றி இங்கு காண்போம். இந்தியாவில் COVID-19 பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முககவசம், சானிடைசர் என கொரோனா தொடர்பான பொருட்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் ஜியோமி Mi KN95 மாஸ்குகளை அறிமுகம் செய்வதாக அறிவித்தது.

இதுகுறித்து ஜியோமியின் இந்திய நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின் ட்விட்டரில் பதிவிட்டுள்ள தகவலில், புதிய Mi KN95 நான்கு அடுக்கு பாதுகாப்பு மற்றும் 95 சதவீத பாக்டீரியாவை வடிகட்டும் செயல்திறன் (BFE) உடன் வருகிறது என்று கூறினார். நாட்டில் COVID-19 தொற்றுநோயின் முதல் அலைகளில் இந்த நிறுவனம் லட்சக்கணக்கான முகமூடிகளை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கு நன்கொடையாக வழங்கியதாகவும், இப்போது அது Mi KN95 ஐ பொது மக்களுக்காக கொண்டு வருகிறது என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.


Mi KN95 Mi ஸ்டோரிலிருந்து ரூ. 250 (2 முக கவசங்கள்) மற்றும் ரூ. 600 (5  முக கவசங்கள்)க்கு கிடைக்கிறது. வடிவமைப்பைப் பொறுத்தவரை, Mi மாஸ்க் ஒற்றை வெள்ளை வண்ண நிறத்தில் வருகிறது. பாக்டீரியா மற்றும் சிறிய துகள்களை வடிகட்ட உதவும் இரண்டு அடுக்கு ஒரு உருகிய-துணியால் செய்யப்பட்டுள்ளது. ஒரு செய்தி வெளியீட்டில் இந்த நிறுவனம் 'முககவசத்தில் பயன்படுத்தப்படும் மைக்ரோஃபில்ட்ரேஷன் பொருள் இலகுவாகவும், உங்கள் தோலினை போல் மென்மையாகவும் இருக்கும்,

இதை நீண்ட நேரம் அணிய முடியும் என்பதை உறுதி செய்கிறது' என குறிப்பிட்டது. இது மென்மையான காதுகுழாய்களை கொண்டுள்ளது. காதுகளைச் சுற்றி எந்த வலியும் இல்லாமல் பயனர்கள் நீண்ட நேரம் அணிய Mi முககவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூக்குக்கும் முககவசத்திற்கும் இடையில் காற்று இடைவெளியை அகற்றுவதற்காக மூக்கைச் சுற்றி இந்த Mi KN95 முகமூடி சரியாக பொருந்துமாறு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்ணாடி அணியும் போது இந்த முககவசம் தொந்தரவை தராது.

மேலும் படிக்க... Gold Rate | குறைந்தது தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் என்ன?கடந்த மாதம், ஜியோமி இந்தியாவில் தொற்று இல்லாத ஹேண்ட்வாஷை தயாரிப்பதற்கு Mi ஆட்டோமேட்டிக் சோப் டிஸ்பென்சர் உள்ளிட்ட பல ஸ்மார்ட் வீட்டு தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. Mi ஆட்டோமேட்டிக் சோப் டிஸ்பென்சர் Mi.com மற்றும் Mi Home கடைகளில் 999 ரூபாய்க்கு கிடைக்கிறது.Mi ஆட்டோமேட்டிக் சோப் டிஸ்பென்சர் 60-90 மிமீ அகச்சிவப்பு உணர்திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 0.25 வினாடிகளில் நுரையை ஏற்படுத்தும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பல சரக்குகளில் சிறந்தவற்றை மட்டும் பயன்படுத்துவது முக்கியம். அந்த வகையில் இந்த Mi தயாரிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர்.
First published: October 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading