இந்தியாவின் முதல் நிலநடுக்க எச்சரிக்கை செயலி அறிமுகம் - சிறப்பம்சங்கள் என்னென்ன?

நிலநடுக்கம்

நிலநடுக்கம் குறித்து முன்கூட்டியே தெரிவித்து மக்களை உஷார்படுத்தும்

  • Share this:
    ஐ.ஐ.டி. உருவாக்கிய இந்தியாவின் முதல் நிலநடுக்க எச்சரிக்கை செயலியை உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி அறிமுகம் செய்து வைத்தார்.

    நில நடுக்கம் வருவதை முன்கூட்டியே கண்டுபிடித்து எச்சரிக்கும் மொபைல் செயலியை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கி ஐ.ஐ.டி. உருவாக்கி உள்ளது. இந்தியாவில் இப்படி ஒரு செயலி உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த செயலி 2 வடிவங்களில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் இது இணக்கமானது.

    இந்த திட்டத்தில் ரூர்கி ஐ.ஐ.டி.க்குத் தேவையான உதவிகளை உத்தரகாண்ட் மாநில பேரிடர்மேலாண்மை ஆணையம் செய்து கொடுத்தது. இந்த மொபைல் செயலியானது, நிலநடுக்கம் குறித்து முன்கூட்டியே தெரிவித்து மக்களை உஷார்படுத்தும். நில நடுக்கத்தைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியிருப்போர் இருப்பிடத்தை அறியவும் இது உதவும். நில நடுக்கத்தின் தொடக்கத்தை கண்டறிந்து, குறிப்பிட்ட நில நடுக்கம் ஒரு பகுதியை தாக்குவதற்கு முன்பாகவே இந்த செயலி கண்டுபிடித்து அறிவிக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது குறித்து ரூர்கி ஐ.ஐ.டி. இயக்குனர் அஜித் கே. சதுர்வேதி கூறுகையில், “ரூர்கி ஐ.ஐ.டி. நில நடுக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் மொபைல் செயலியை வடிவமைத்து இருப்பதை பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். நில நடுக்கம் நிகழப்போவதை உத்தேச நேரத்துடன், தாக்கத்தின் அளவுடன் இது கூறி விடும். இதனால், அந்த இடத்தில் உயிரிழப்பைத் தடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

    Must Read : விமானம் பறக்கும் உயரத்தில் பாதியளவு உயரம் கொண்ட சாலை.. இந்தியாவின் புதிய சாதனை!

    இந்தச் செயலியை டேராடூனில் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி அறிமுகம் செய்து வைத்தார். இந்த செயலி ‘உத்தரகாண்ட் பூகம்ப் அலர்ட்’ என்று அழைக்கப்படும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published: