• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 80 வீடியோக்கள்.. 250க்கும் மேற்பட்ட நபர்கள் - ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல்

80 வீடியோக்கள்.. 250க்கும் மேற்பட்ட நபர்கள் - ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சமூகவலைதளங்களில் இளம்பெண்களை போல பேசி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்த கும்பலை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
    சமூகவலைதளங்களில் இளம்பெண்களை போல பேசி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்த கும்பலை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    மும்பையை சேர்ந்த ஒரு கும்பல் சமூகவலைதளங்களில் இளம்பெண்களை போல் ஃபேக் ஐடி உருவாக்கி ஆபாச வீடியோ எடுத்து வீடியோ மிரட்டி வந்ததாக சைபர் க்ரைம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார் சிறார் உட்பட 5 பேரை கைது செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள், “ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இளம்பெண்களை போல் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஃபேக் ஐடியை உருவாக்கியுள்ளனர். அந்த ஐடியின் மூலம் பல்வேறு நபர்களுக்கு ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்துள்ளனர். ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட்களை ஏற்கும் நபர்களிடம் முதலில் நட்பாக பேசுவார்கள். அதன்பின்னர் அந்த நபர்களிடம் காதல் வலை வீசுவார்கள். இவர்களின் வலையில் சிக்கும் நபர்களை காதலிப்பது போல் பேசி நம்பிக்கையை வளர்ப்பார்கள். சபலத்தில் சிக்கும் ஆண்களை கேமரா முன்பு ஆபாச செயலில் ஈடுபட செய்துள்ளனர். அந்த காட்சிகள் அனைத்தையும் இந்த கும்பல் வீடியோவாக பதிவு செய்துக்கொள்வார்கள்

    Also Read: எங்க பொண்ணுகூட பழகுறத நிறுத்து - மகளின் காதலனை வீடு புகுந்து வெட்டிய பெற்றோர்கள்

    இதன்பின்னர் தங்களது ஆட்டத்தை ஆரம்பிப்பார்கள். பொதுவாக இந்த கும்பல் வசதிபடைத்தவர்களை டார்கெட் செய்து இயங்கி வந்துள்ளது. ஆபாச வீடியோக்களை காட்டி அந்த நபர்களை மிரட்டத் தொடங்கியுள்ளனர். கேட்கும் தொகையை கொடுக்கவில்லை என்றால் இந்த வீடியோக்களை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவோம் என பயம் காட்டியுள்ளனர். சிலர் அந்த கும்பல் கேட்கும் தொகையை கொடுத்துள்ளனர். இவர்கள் சமூகவலைதளத்தில் 10-க்கும் மேற்பட்ட போலியா ஐடிக்களை உருவாக்கியுள்ளனர். இதற்காக 6 மெயில் ஐடிக்களை அவர்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 80 வீடியோக்களை ஆபாச இணையத்தளத்தில் விற்பனை செய்துள்ளனர். டெலிகராம் ஆப் மூலம் வீடியோக்களை உலாவிட்டுள்ளனர். போலீசார் விசாரணையை தொடங்கியதும் அந்த க்ரூப்பை டி ஆக்டிவேட் செய்துள்ளனர்.

    இந்த கும்பலிடம் பல முக்கியப்புள்ளிகள் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. நாக்பூர் உத்தரப்பிரதேசம், ஓடிசா உள்ளிட்ட இடங்களில் பதுங்கியிருந்த இந்த கும்பலைச் சேர்ந்த நபர்களை கைது செய்துள்ளோம். நேபாளை சேர்ந்த வங்கிக்கணக்கில் பணப்பரிவர்தனை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக” தெரிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: