• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • CAA : குடியுரிமை திருத்த சட்டம் - மத்திய அமைச்சர் அளித்த விளக்கம்

CAA : குடியுரிமை திருத்த சட்டம் - மத்திய அமைச்சர் அளித்த விளக்கம்

நித்யானந்த் ராய்

நித்யானந்த் ராய்

சிஏஏ விதிமுறைகள் வெளியிட்ட பின்னர் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் விதிமுறைகள் வெளியிட்ட பின்னரே குடியுரிமை வழங்கப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார்.

    எதிர்ப்புக்கு இடையில் மத்திய அரசு கடும் கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டத்திற்கான விதிமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், இந்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெறுவதற்காக புதிய விண்ணப்பங்கள் வந்துள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதிலளித்தார்.

    அதில், இந்தச் சட்டத்திற்கான விதிமுறைகளை வெளியிட மக்களவை மற்றும் மாநிலங்களவையின் துணை சட்ட குழுக்களிடம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வரை கால நீட்டிப்பு கேட்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த விதிமுறைகள் வெளியிட்ட பின்னர் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் பின்னர்தான், குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.

    Must Read : மாநிலங்களுக்கு மீண்டும் அதிகாரம் - புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

    மற்றொரு கேள்விக்கு அவர் அளித்த பதிலில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் கடந்த ஜூலை 20ஆம் தேதி வரை 183 பேர் கைது செய்யப்பட்டதாக கூறினார். எனினும் அதில் யார் மீதும் தேசவிரோத வழக்கு அல்லது பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட வில்லை என்று கூறினார். இந்நிலையில், மத்திய ஆயுதப்படைகள் குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நித்யானந்த் ராய், கடந்த 6 ஆண்டுகளில் 680 துணை ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், கேள்வி ஒன்றுக்கு மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், கடந்த 3 ஆண்டுகளில் 96 அரசு உயர் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக கூறினார். ஊழல் மற்றும் பிற குற்ற செயல்கள் தொடர்பாக இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: