பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: நிரவ் மோடி சகோதரருக்கு இன்டர்போல் நோட்டீஸ்

நெஹால் மூலமாகவே தொடர்ந்து நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக லண்டன் நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

Web Desk | news18
Updated: September 13, 2019, 12:43 PM IST
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: நிரவ் மோடி சகோதரருக்கு இன்டர்போல் நோட்டீஸ்
நிரவ் மோடி
Web Desk | news18
Updated: September 13, 2019, 12:43 PM IST
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணப் பரிவர்த்தனையில் மோசடி செய்த குற்றச்சாட்டில் தொடர்புடையதாக நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்-க்கு இன்டர்போல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

13,600 கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் நெஹல்-க்கு ரெட் நோட்டீஸ் அனுப்புமாறு இந்திய அமலாக்கத்துறை இன்டர்போலுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இதையடுத்து அவருக்கு ரெட் நோடீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக லண்டன் நீதிமன்றமும் நிரவ் மோடி தனது அமெரிக்கவாழ் சகோதரரின் உதவியாலே இந்த மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சுட்டிக்காட்டிருந்தது.

நிரவ் மோடியை நாடு கடத்தும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை விசாரித்து தலைமை நீதிபதி எம்மா அர்பூத்நாட் கூறுகையில், “இந்த வழக்கில் முக்கிய சில ஆதாரங்கள் இருந்துள்ளன. ஆனால், உயர் இடங்களில் இருந்து வரும் சில அழுத்தங்கள் இந்தியாவில் உள்ள ஆதாரங்களை அழித்துள்ளன” எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.


நிரவ் மோடியின் சகோதரரான நெஹால் பெல்ஜியம் குடியுரிமை உள்ளவர். தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். இவர் மூலமாகவே தொடர்ந்து நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக லண்டன் நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும் பார்க்க: பாரீஸில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தத் தடை- வரவேற்பு பெரும் ரசாயன எதிர்ப்பு இயக்கம்

சென்னையில் கடத்தப்பட்ட சுபாஷ்... அவினாஷ் ஆக திரும்பினார்

Loading...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...