நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கொரோனாவை வெல்லலாம்: தற்போது முன்பை விட யோகா முக்கியம் - பிரதமர் மோடி

கொரோனா பரவல் உள்ள நிலையில் நாட்டு மக்கள் யோகா கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 6-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கொரோனாவை வெல்லலாம்: தற்போது முன்பை விட யோகா முக்கியம் - பிரதமர் மோடி
நரேந்திர மோடி
  • Share this:
இந்த ஆண்டு குடும்பத்துடன் யோகா செய்யுமாறும், கொரோனா பரவல் உள்ள நிலையில் நாட்டு மக்கள் யோகா கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 6-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

6-வது சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றிய உரையில், ”தினமும் பிரணாயாமத்தை உங்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ளுங்கள். அது உங்களின் சுவாச மண்டலத்தையும் நோய் எதிர்ப்புத் திறனையும் பாதுகாக்கக்கூடியது. உடல் வலிமை மட்டுமின்றி யோகா மன அமைதியையும் தருகிறது. யோகா எந்த பாகுபாடும் காட்டுவதில்லை, மதம், மொழி, இனம், நாட்டு எல்லைகள் கடந்து சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் வளர்க்கிறது.

நமக்குத் தேவையானது யோகா செய்வதற்கான நேரமும் சிறிதளவு இடமும் மட்டுமே" என்று தெரிவித்துள்ளார்.


ஒ”ட்டுமொத்த மனித குலத்துக்கும் இந்தியாவின் விலைமதிப்பற்ற பரிசு யோகா. பிரதமர் மோடியின் முயற்சிகள் யோகாவை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வழியை ஏற்படுத்தின, மனம், உடல், செயல், இயற்கை என அனைத்தையும் ஒன்றிணைக்கும் வழி யோகாவில் உள்ளது” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading