Home /News /national /

பசிபிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கப்போகும் சர்வதேச விண்வெளி நிலையம்; எப்போது?

பசிபிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கப்போகும் சர்வதேச விண்வெளி நிலையம்; எப்போது?

விண்வெளி நிலையம்

விண்வெளி நிலையம்

Pacific Ocean : 2030 ஆம் ஆண்டிற்கு பிறகு, இந்த மிதக்கும் ஆய்வுக்கூடம் செயல்படுவதை நிறுத்திவிட்டு பூமியை நோக்கி பாய்ந்து வரும் என்று கூறப்படுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station - ISS) இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, லோ-எர்த் ஆர்பிட்டில், அதாவது பூமியின் தாழ் வட்டப்பாதையில் வினாடிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் வட்டமிட்டு வருகிறது. இந்த நொடி வரையிலாக மனித நாகரீகம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் சில அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைய இந்த ஆய்வகம் உதவி வருகிறது.

நினைவூட்டும் வண்ணம் இந்த விண்கலம், ஆழமான விண்வெளி ஆய்வுகளை நிகழ்த்தும் நோக்கத்தின் கீழ் 1998 ஆம் ஆண்டு விண்வெளிக்குள் செலுத்தப்பட்டது. மனிதகுலத்திற்கு உதவும் பல வகையான ஆராய்ச்சிகளை செய்த பிறகு, ஐஎஸ்எஸ் (ISS) ஆனது கூடிய விரைவில் ஓய்வு பெற போகிறது.

நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (National Aeronautics and Space Administration) கூற்றின் படி, 2031 ஆம் ஆண்டுக்குள் ஐஎஸ்எஸ் அதன் செயல்பாட்டை நிறுத்தி விடும். ஒரு செய்திக்குறிப்பில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் இயக்குனர் ராபின் கேடென்ஸ், "ஒரு அற்புதமான அறிவியல் தளமாக இந்த சர்வதேச விண்வெளி நிலையமானது மூன்றாவது தசாப்தத்திற்குள் நுழைகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ |  காற்று மாசுவை குறைத்தால் நுரையீரல் மட்டுமன்றி சிறுநீரகத்திற்கும் நல்லது - சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!
 2030 ஆம் ஆண்டிற்கு பிறகு, இந்த மிதக்கும் ஆய்வுக்கூடம் செயல்படுவதை நிறுத்திவிட்டு பூமியை நோக்கி பாய்ந்து வரும் என்று கூறப்படுகிறது. அதாவது 2030 க்கு பிறகு பூமியின் தாழ் வட்டப்பாதையின் கடைசிப் பகுதியை இந்த சர்வதேச விண்வெளி நிலையம் காணும், அதாவது பூமியில் வந்து விழும்!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கூற்றுப்படி, ஐஎஸ்எஸ்-இன் ஆபரேட்டர்கள் இந்த விண்வெளி நிலையத்தை மக்கள் வசிக்காத பகுதிக்கு, இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தெற்கு பசிபிக் பெருங்கடலை நோக்கி அனுப்புவார்கள், பொதுவாக இது 'பாயிண்ட் நெமோ' (Point Nemo) என்று அழைக்கப்படுகிறது. அறியாதோர்களுக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள பாயிண்ட் நெமோ, பூமியில் இருந்து மிகவும் தூரமான ஒரு இடமாகக் கருதப்படுகிறது.

ALSO READ |  மண்வளம் காக்க நோபல் பரிசு பெற்ற ஐ.நா அமைப்புடன் ஈஷா புரிந்துணர்வு ஒப்பந்தம்

முன்னரே குறிப்பிட்டபடி, ஐஎஸ்எஸ் ஆனது எண்ணற்ற அறிவியல் செயல்பாடுகள் மற்றும் சோதனைகளுக்கு உதவி வருகிறது. கூடுதலாக, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான நாசாவின் முயற்சிக்கு அடித்தளமாகவும் இருக்க உள்ளது. இருப்பினும், 2031 ஆம் ஆண்டில், ஐஎஸ்எஸ் ஆனது பிரபஞ்சத்தின் ஒரு அமைப்பாக இருக்காது, தரைக்கு திரும்பும். கடலில் விழுந்த பிறகு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் எந்தெந்த பகுதிகள் மிஞ்சும் என்பது விழுந்த பிறகு தான் தெரிய வரும்.

ஐஎஸ்எஸ்-ன் "இந்த" ஓய்வுக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை என்னென்ன என்பது குறித்தும் நாசா ஒரு செய்திக்குறிப்பின் வழியாக சில விவரங்களை வெளியிட்டு உள்ளது. நாசா இப்போது தனது சொந்த மற்றும் வணிக ரீதியான சிஎல்டி-க்களை (CLDs) அதாவது கமர்ஷியல் எல்இஓ டெஸ்டினேஷன்களை (Commercial LEO Destinations) உருவாக்குகிறது, இது பூமியின் தாழ் வட்டப்பாதையில் ஐஎஸ்எஸ்-கு மாற்றாக செயல்படும்.

ALSO READ |  உயர் போலீஸ் அதிகாரி உட்பட லஞ்ச, ஊழல் அதிகாரிகள் 152 பேருக்கு கட்டாய ஓய்வு- ஒடிசா அதிரடி

நாசா தலைமையகத்தில் கமர்ஷியல் ஸ்பேஸ் பிரிவின் இயக்குனர் ஆக இருக்கும் ஃப்ஹில் மெக்அலிஸ்டர், “நாசாவின் உதவியுடன் தனியார் நிறுவனங்களால் தொழில்நுட்ப ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சிஎல்டி-களை உருவாக்கி இயக்க முடியும். விண்வெளியில் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் செலவு குறைந்த இடங்களை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கு உதவ, நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் செயல்பாட்டு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறி உள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Space

அடுத்த செய்தி