• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ”எனக்கு அந்த வாய்ப்பைத் தாருங்கள்..” அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை

”எனக்கு அந்த வாய்ப்பைத் தாருங்கள்..” அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை

துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங்

துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங்

Nirbhaya Case |

  • News18
  • Last Updated :
  • Share this:
    நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்கக்கோரி சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

    இந்த மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில் நால்வருக்கும் விரைவில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும். இந்த நிலையில், குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்கக்கோரி சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தை வர்த்திகா சிங் தனது ரத்தத்தால் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும், இதன்மூலம் பெண்களால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியும் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இத்தகைய நடவடிக்கை சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என தான் நம்புவதாகவும், இதனை திரைப்பட நடிகைகள் மற்றும் பெண் எம்பிக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் வர்த்திகா சிங் தெரிவித்துள்ளார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: