Home /News /national /

சர்வதேச தாய்மொழி தினம் : இந்தியாவில் பேசப்படும் தாய் மொழிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

சர்வதேச தாய்மொழி தினம் : இந்தியாவில் பேசப்படும் தாய் மொழிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

சர்வதேச தாய்மொழி தினம்

சர்வதேச தாய்மொழி தினம்

International Mother Language Day 2022 : இந்திய அரசு கடந்த 2011ஆம் ஆண்டில் நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவில் பேச்சு வழக்கில் 121 மொழிகளும், 270 தாய்மொழிகளும் இருக்கின்றன என்பது தெரிய வந்தது.

உலக அளவில் பிப்ரவரி 21ஆம் தேதி சர்வதேச தாய்மொழிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது, பன்மொழி கலாச்சாரத்தை அங்கீகரிக்கவும், ஊக்குவிக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. பழமொழி பேசும் மக்கள் மூலமாக அவர்களது கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அறிவு ஆகியவற்றை காக்கும் நோக்கத்திலும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக அனுசரிப்பது குறித்து கடந்த 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பில் நடைபெற்ற, பொது மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 2000ஆவது ஆண்டு முதல் சர்வதேச தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலுள்ள தாய்மொழிகள்

இந்திய அரசு கடந்த 2011ஆம் ஆண்டில் நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவில் பேச்சு வழக்கில் 121 மொழிகளும், 270 தாய்மொழிகளும் இருக்கின்றன என்பது தெரிய வந்தது. அகில இந்திய அளவில் ஒரு மொழியைப் பேசும் 10,000 மக்களை பிரித்து பார்ப்பதன் மூலமாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தியாவில் உள்ள மொழிகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. முதலாவதாக அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் ஆகும். இரண்டாவதாக எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்படாத தாய்மொழிகள் ஆகும். நாட்டில் மொத்தம் வரையறுக்கப்பட்ட பிரிவில் 123 மொழிகளும், வரையறை செய்யப்படாத பிரிவில் 147 தாய் மொழிகளும் இருக்கின்றன.

இதையும் படியுங்கள் : இந்தியாவின் வரலாறு தெரியாமல் ராகுல் காந்தி பேசி வருகிறார்: அமித் ஷா விமர்சனம்

அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, ராஜஸ்தானி, ஹரியான்வி, கன்னடம், கொங்கனி, மணிப்பூரி, மலையாளம், பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், ஹிந்தி, உருது மற்றும் தெலுங்கு ஆகியன எட்டாவது அட்டவணையில் பட்டியல் இடப்பட்டிருக்கும் தாய் மொழிகளாகும். இது தவிர மராத்தி, கர்வாலி, சட்டீஸ்கரி, மைதிலி, மார்வாரி, டோக்ரி, பகாரி, சம்பல்புரி மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன.

ஆப்கனி, அரபிக், ஆங்கிலம், பயோரி, காரியா, கின்னௌரி, துளு, ஷேர்பா, மா, மோன்பா மற்றும் குஜரி ஆகிய மொழிகள் பட்டியலிடப்படாத தாய் மொழிகளாக உள்ளன. இது தவிர, மலைவாழ் மக்கள் மற்றும் நாடோடி இனக் குழு மக்கள் பேசும் மொழிகளும் உள்ளன. ஆனால், இவற்றில் பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்து வடிவம் கிடையாது.

இதையும் படியுங்கள் : மோடி மீதான மக்கள் அன்பு அதிகரித்துள்ளது: அமித் ஷா

2011ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட மொத்த மொழிகள் குறித்த பட்டியலின் அடிப்படையில் நாட்டிலுள்ள 96.71 சதவீத மக்கள் ஏதேனும் ஒரு வரையறை செய்யப்பட்ட மொழியை தாய்மொழியாக கொண்டுள்ளனர். சுமார் 3.29 சதவீதம் மக்கள் மட்டுமே வரையறை செய்யப்படாத மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். மொழியின் தொன்மையை அடிப்படையாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கபட்டுள்ளன.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Tamil language

அடுத்த செய்தி