`சர்வதேச ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும்!’ - பாஜக எம்.பி கோரிக்கை

`சர்வதேச ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும்!’ - பாஜக எம்.பி கோரிக்கை

பாஜக எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெண்கள் தினத்தன்று ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

 • Share this:
  சர்வதேச பெண்கள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முக்கிய தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பெண்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெண்கள் தினத்தன்று ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

  நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 8-ம் தேதியான இன்று தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, இன்று வெங்கையா நாயுடு தலைமையில் நாடாளுமன்றம் கூடியது. இந்த அமர்வில் பெண்கள் தினத்தை ஒட்டி உறுப்பினர்கள் பெண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பேசிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சோனல் மன்சிங், ’சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படும் இன்று சர்வதேச ஆண்கள் தினமும் கொண்டாட வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன்” என்று பேசினார்.

  எம்.பி.சோனல் மன்சிங்கின் கோரிக்கை அங்கிருந்த உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சமத்துவம் பற்றி தான் பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஆண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 19-ம் தேதி கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ram Sankar
  First published: