ஹோம் /நியூஸ் /இந்தியா /

டிச. 15 முதல் சர்வதேச விமான சேவைகளை துவக்கும் இந்தியா.. ரிஸ்க்கில் உள்ள நாடுகளின் பட்டியலும் வெளியீடு.!

டிச. 15 முதல் சர்வதேச விமான சேவைகளை துவக்கும் இந்தியா.. ரிஸ்க்கில் உள்ள நாடுகளின் பட்டியலும் வெளியீடு.!

மாதிரி படம்

மாதிரி படம்

ஐரோப்பா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இதற்கு முன் இயங்கியதில் 75% விமானங்களும், சீனா மற்றும் ஹாங்காங்கிற்கு 50% விமான சேவைகளும் துவக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கோவிட்-19 காரணமாக தடைப்பட்டிருந்த விமான சேவைகளை மீண்டும் துவக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது இந்தியா. கிட்டத்தட்ட 20 மாத இடைவெளிக்குப் பிறகு டிசம்பர் 15 முதல் அனைத்து நாடுகளுக்கும் சர்வதேச விமானங்களை தொடங்க இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) அறிவித்துள்ளது. அனைத்து நாடுகளுக்கும் விமான போக்குவரத்து துவங்கினாலும் ஒரு நாட்டின் தொற்று அபாய நிலையை பொறுத்து இயக்க அனுமதிக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் இருக்கும் என்று தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு டிசம்பர் 15 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமான சேவைகளை இந்தியா மீண்டும் தொடங்கும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு உள்ளது.

இது தொடர்பான உத்தரவில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியிருப்பதாவது, "இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கும் திட்டமிடப்பட்ட கமர்ஷியல் இன்டர்நேஷனல் பேசஞ்சர் சர்வீஸை மீண்டும் தொடங்குவது தொடர்பாக உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்டவற்றுடன் கலந்தாலோசித்து ஆராயப்பட்டது. முடிவில் இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்தும் திட்டமிடப்பட்ட கமர்ஷியல் இன்டர்நேஷனல் பேசஞ்சர் சர்வீஸ்களை வரும் டிசம்பர் 15, 2021 முதல் மீண்டும் தொடங்கப்படலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Also read:   உகாண்டாவிடம் வேலையைக் காட்டிய சீனா: ஒரே விமான நிலையமும் பறிபோகும் அபாயம்..

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற இந்தியர்களுக்கான முக்கிய நாடுகளுக்கு COVID-க்கு முந்தைய காலத்தை போல100% விமானங்களை இயக்க அனுமதிக்க முடிவு செய்யபட்டு இருக்கிறது.

ஐரோப்பா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இதற்கு முன் இயங்கியதில் 75% விமானங்களும், சீனா மற்றும் ஹாங்காங்கிற்கு 50% விமான சேவைகளும் துவக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல ஆப்ரிக்க நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் வேரியன்ட் தீவிரமாக பரவி வரும் நிலையில் பல நாடுகள் பயண கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கி இருக்கின்றன.  இந்த நிலைநிலையில் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

Also read:   மகனுக்காக வீடு அல்ல கோட்டையே கட்டித்தந்த தந்தை

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில், சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய 14 நாடுகளுக்கு இது பொருந்தாது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த பிராந்தியங்களில் அதிகரித்து வரும் கோவிட்-19 பரவலும் இதற்குக் காரணம். இருப்பினும், ஏர் பபுள் ஏற்பாட்டின் கீழ் சிறப்பு விமானங்கள் தொடரும்.

இந்தியாவுடன் 'ஏர் பபுள்' ஒப்பந்தம் செய்து கொள்ளாமல் தொற்று ரிஸ்க்கில் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள், இருதரப்பு திறன் உரிமைகளில் 50% மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இடையே திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read:   தங்கம் என்று நினைத்து எரிகல்லை வீட்டில் வைத்திருந்த நபர்? நடந்தது என்ன?

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoFHW) ஆபத்தில் உள்ள நாடுகள் என அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலை பகிர்ந்து உள்ளது. கீழ்காணும் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சில கூடுதல் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியிருக்கும். யுனைட்டட் கிங்டம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல், போட்ஸ்வானா.

First published:

Tags: Flight