Home /News /national /

2 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்... தேதியை அறிவித்த மத்திய அரசு

2 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்... தேதியை அறிவித்த மத்திய அரசு

மார்ச் 2020-க்கு பின்னர் மீட்பு நடவடிக்கை, ராணுவ பயன்பாடு, அரசு அலுவல் போன்ற அதிமுக்கிய காரணங்களுக்காக மட்டும் ஓரிரு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

    கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-
    கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி பரவலாக்கப்பட்டுள்ளது. மீண்டும் சர்வதேச விமான சேவையை தொடங்குவது குறித்து பங்குதாரர்களுடனும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகளுடனும் ஆலோசனை நடத்தினோம்.

    இதையும் படிங்க - இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4,000-க்கும் கீழாக குறைவு

    இதன் அடிப்படையில் வர்த்தக ரீதியிலான சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வரும் 27-ம்தேதி (மார்ச் 27,2022 ஞாயிறு) முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை தொடங்கும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க - Exclusive : உக்ரைனின் பதற்றம் நிறைந்த சுமி நகரில் 600 மாணவர்கள் சிக்கியுள்ளனர்... மத்திய அமைச்சர் தகவல்

    கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவியதன் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவையை மத்திய அரசு நிறுத்தியது.

    இதன்பின்னர் மீட்பு நடவடிக்கை, ராணுவ பயன்பாடு, அரசு அலுவல் போன்ற அதிமுக்கிய காரணங்களுக்காக மட்டும் ஓரிரு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மீண்டும் பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், விமானப் போக்குவரத்து துறை நஷ்டத்திலிருந்து மீளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பயணத்தின்போது மத்திய அரசின் சுகாதாரத்துறை வகுத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, பயணிகள் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Flight

    அடுத்த செய்தி