ஹோம் /நியூஸ் /இந்தியா /

கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. சர்வதேச விமான பயணக் கட்டணம் 50% குறைய வாய்ப்பு.!

கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. சர்வதேச விமான பயணக் கட்டணம் 50% குறைய வாய்ப்பு.!

வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கின்ற அனைவருக்கும் ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. வெகு விரைவில் சர்வதேச விமான டிக்கெட்டுகள் விலை 40 முதல் 50 சதவீதம் வரை குறைய உள்ளது

வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கின்ற அனைவருக்கும் ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. வெகு விரைவில் சர்வதேச விமான டிக்கெட்டுகள் விலை 40 முதல் 50 சதவீதம் வரை குறைய உள்ளது

வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கின்ற அனைவருக்கும் ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. வெகு விரைவில் சர்வதேச விமான டிக்கெட்டுகள் விலை 40 முதல் 50 சதவீதம் வரை குறைய உள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கின்ற அனைவருக்கும் ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. வெகு விரைவில் சர்வதேச விமான டிக்கெட்டுகள் விலை 40 முதல் 50 சதவீதம் வரை குறைய உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக, வர்த்தக ரீதியான சர்வதேச விமானச் சேவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்திய அரசு இந்த கட்டுப்பாடுகளை அண்மையில் தளர்த்தியுள்ளதால், விமானப் போக்குவரத்துக் கட்டணம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காலத்தில், சர்வதேச விமானங்கள் குறைவான எண்ணிக்கையில் தான் இயக்கப்பட்டன என்பதால், விமானக் கட்டணம் மிகக் கூடுதலாக இருந்தது. இதற்கிடையே, இந்தியாவுக்கும், சில நாடுகளுக்கும் இடையே ஏர் பபிள் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டன.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால், உள்நாட்டைச் சேர்ந்த சர்வதேச விமான சேவை நிறுவனமான இண்டிகோ சார்பில், நாளொன்றுக்கு 100 விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன. வெளிநாட்டு விமான நிறுவனங்களான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்விஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்களும், அதன் சேவையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.

ALSO READ |  ''போலி ஆவணங்கள் மூலம் கொரோனா நிவாரண நிதி'' - உச்ச நீதிமன்றம் கவலை

முன்னதாக, சர்வதேசப் பகுதிகளுக்கான விமானச் சேவையை மார்ச் 27-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கொரோனா காலம் தொடங்கிய பிறகு, இதுபோன்று அனைத்துச் சேவைகளுக்குமான அனுமதி அளிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

இதுகுறித்து, இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “உலகெங்கிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில், தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் ஆலோசனை செய்த பிறகு, வரையறுக்கப்பட்ட சர்வதேச வர்த்தக விமான சேவைகளைத் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டிருந்தது.

ALSO READ | பிரதமர் மோடி அபாரமான திறமைசாலி - காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டு

 தற்போதைய சூழலில், ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட சில நாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட விமான சேவைகள் இந்தியாவில் இருந்து இயங்கி வருகின்றன. அதிக சேவைகளை இயக்க முடியவில்லை என்ற சூழலில், விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் லாபம் ஈட்ட முடியாத சூழல் நிலவியது.

உக்ரைன் மீது ரஷ்யா அண்மையில் போர் தொடுத்த காரணத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும், இதர தடங்கல்கள் காரணமாகவும் விமான பயண கட்டணம் சற்று கூடுதலாக இருந்தது.

தற்போது கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், கட்டுப்பாடுகளை இந்திய அரசு தளர்த்துவது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக கருதப்படுகிறது. குறிப்பாக, கோடை கால விடுமுறைக்கு வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் பயணிகளுக்கு, அதிக விமானங்கள் இயக்கப்பட இருப்பது உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Flight, Flight travel