International Day of Family Remittances 2021: IDFR சர்வதேச நாளின் முக்கியத்துவம் என்ன? வரலாறும், பின்னணியும்!

IDFR சர்வதேச நாளின் முக்கியத்துவம்

கடந்த இரு தசாப்தங்களாக வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவது உலகளவில் 5 மடங்கு வளர்ச்சியை சந்தித்துள்ளது.

  • Share this:
வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள், தங்கள் குடும்பங்களுக்காக அனுப்பும் நிதியின் முக்கியத்துவத்தை குறிக்கும் விதமாக குடும்பங்களுக்கு நிதி அனுப்பும் சர்வதேச நாள் (International Day of Family Remittances) கடைபிடிக்கப்படுகிறது.

ஜூன் 16 ஆம் தேதியை ஐ.டி.எப்.ஆர் நாளாக ஐ.நா அங்கீகரித்துள்ளது. உலகளவில் 200 மில்லியன் மக்கள் தங்களின் சொந்த நாட்டைவிட்டு வேறு நாட்டில் வேலை செய்வதாகவும், அவர்கள் அனுப்பும் நிதி தோராயமாக 800 மில்லியனுக்கும் அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி, இயற்கை பேரிடர் மற்றும் தொற்று நோய்களின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் கொடுக்கும் நிதியின் பங்கு அளப்பரியதாக இருக்கிறது. அதன் முக்கியத்துவத்தை குறிப்பதற்காகவும், நிதி பரிமாற்றங்களின்போது பிடிக்கப்படும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் இந்தநாளின் நோக்கமாக உள்ளது.

ALSO READ | மூக்கின் மூலம் செல்போன் இயக்கி, டிக் டாக்கில் டான்ஸ் வீடியோ பதிவிட்ட நாய் - வைரல் வீடியோ!

முக்கியத்துவம்

வெளிநாடுகளில் இருந்து தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவது என்பது மிக சாதாரணமாக தோன்றினாலும், அதன்மூலம் அடிப்படை வாழ்வாதாரங்கள் மேம்படுகின்றன. ஒருவர் அனுப்பும் தொகை என்பது குறைந்ததாக இருக்கலாம், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அவை மிகப்பெரிய பங்களிப்பை செய்கின்றன. கல்வி, பொருளாதாரம், திறன் மேம்பாடு, தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதன் பங்கு இருக்கிறது.

ஏழ்மையான குடும்பம் சமூகத்தில் குறிப்பிட்ட நிலையை அடைவதற்கு அந்தப் பணம் உதவியாக உள்ளது. குடும்பத்துக்கு மட்டுமின்றி சமூகத்தின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் அந்த தொகையின் முக்கியத்துவத்தை இந்நாளில் உணர்த்துவற்காக கடைபிடிக்கப்படுகிறது.

கோவிட் வைரஸ் பிரதிபலிப்பு

கடந்த இரு தசாப்தங்களாக வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவது உலகளவில் 5 மடங்கு வளர்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால், கோவிட் தொற்று உலகளவில் பரவத்தொடங்கிய பிறகு வெளிநாடுகளில் இருந்து நடைபெறும் பணப்பரிமாற்றம் என்பது குறைந்து விட்டது. பல்வேறு கணப்புகளின்படி, இந்த பரிமாற்றம் வெகுவாக சரியும் என கூறப்பட்ட நிலையில், உலக வங்கியின் ஆய்வின்படி, கடந்த இரு ஆண்டுகளில் 1.6 விழுக்காடு மட்டுமே சரிந்துள்ளது.

அதாவது 2019 ஆம் ஆண்டு 548 பில்லியின் பணப்பரிமாற்றம் நடைபெற்றிருக்கும் நிலையில், 2020 ஆம் ஆண்டு 8 பில்லியன் குறைந்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு மாதமும் 200 முதல் 300 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உலகளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த நாட்டில் உள்ள குடும்பங்களுக்கு அனுப்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனையை பொறுத்தவரை வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இடையே இருக்கும் ஒரு இணைப்பு பாலம்.

ALSO READ | ஸ்கூல் பெல்ட் மாதிரி இருக்கு - ரூ.35,000க்கு மகள் வாங்கிய பெல்ட்டை பார்த்து ஷாக்கான அம்மா!

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் வளர்ச்சி என்பது புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். குடும்பத்தினருக்கு தேவையான நிதியை சரியான நேரத்தில் அனுப்புவதற்கு டிஜிட்டல் மீடியம்கள் உதவுகின்றன. 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணப்பரிவர்த்தனைகளில் 65 விழுக்காடு மொபைல் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ALSO READ |  7,500 காயின்களை பயன்படுத்தி 9 மணி நேரத்தில் கிச்சனை மாடர்னாக்கிய பெண் - பாராட்டும் நெட்டிசன்கள்!

பணம் பெறுபவர்களுக்கும், அனுப்புவர்களுக்கும் இடையில் இருக்கும் இடைத்தரகர்களின் நிலையை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் களைந்துள்ளன. மேலும், சர்வீஸ் சார்ஜ் மற்றும் கமிஷன் ஆகியவை குறைந்ததாக இருப்பதால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். டிஜிட்டல் மீடியம்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

 
Published by:Sankaravadivoo G
First published: