Home /News /national /

ஜார்க்கண்டில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி.. டெல்லி விரைந்த எம்எல்ஏக்கள், பலிக்குமா பாஜக கனவு!!

ஜார்க்கண்டில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி.. டெல்லி விரைந்த எம்எல்ஏக்கள், பலிக்குமா பாஜக கனவு!!

ஜார்க்கண்டில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி.. டெல்லி விரைந்த எம்எல்ஏக்கள், பலிக்குமா பாஜக கனவு!!

ஜார்க்கண்டில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி.. டெல்லி விரைந்த எம்எல்ஏக்கள், பலிக்குமா பாஜக கனவு!!

கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை வைத்து ஆட்சியை கவிழ்த்து, இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி கட்டிலில் ஏறியது.

    ஜார்கண்டில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணிக்குள் அதிருப்தி எம்எல்ஏக்களால் குழப்பம் நிலவி வருவதால் கூட்டணி ஆட்சி சலசலப்பை சந்தித்துள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. 2019ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இந்த இரு கட்சிகளும் கூட்டணி வைத்து பாஜகவை எதிர்கொண்டது.மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அம்மாநில சட்டப்பேரவையில் 30 இடங்களை மட்டுமே பாஜக கூட்டணியால் கைப்பற்ற முடிந்தது. ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி 51 இடங்களை கைப்பற்றியதால், பாஜக ஆட்சி அகன்று ஜேஎம்எம் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது.

    மாநில காங்கிரஸ் கவலை

    ஜேஎம்எம் கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் மாநில முதலமைச்சரானார். இந்த கூட்டணி அமைச்சரவையில் காங்கிரசும் இடம் பெற்றுள்ளது. சுமார் மூன்றாண்டுகளாக ஒற்றுமையாக நீடித்து வந்த இக்கூட்டணி ஆட்சியில் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஹேமந்த் சோரன் காங்கிரஸ் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் தராமல் ஓரம்கட்டுவதாக மாநில காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    10ம் வகுப்பு தேர்வில் தோல்வி பயம்.. தந்தையை வெட்டிக் கொன்று நாடகமாடிய மகன்!

    தங்களின் கோரிக்கைக்கு முதலமைச்சர் ஹேமந்த் செவிசாய்க்கவில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக கட்சி மேலிடத்திடம் பேச நான்கு அமைச்சர்கள், மாநிலத்தின் மூன்று மூத்த தலைவர்கள் டெல்லி விரைந்துள்ளனர்.

    மேலும்,காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அமைச்சர் பன்னா குப்தா, எம்எல்ஏ இர்பான் அன்சாரி இடையே பூசல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பன்னா குப்தா பாஜகவுடன் நெருக்கம் காட்டிவருவதாக இர்பான் புகார் தெரிவித்துவருகிறார்.

    ஜேஎம்எம் - இல் குழப்பம்

    மேலும், பிரதான கூட்டணி கட்சியான ஜேஎம்எம் இல் இரண்டு எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அக்கட்சி எம்எல்ஏக்களான லோபின் ஹெம்ப்ரோன் மற்றும் சீதா சோரன் அரசுக்கு எதிராக கருத்துக்களை கூறி தனது ஆதரவாளர்களை வைத்து கூட்டம் நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உறவினரான சீதா சோரன், மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக தனது அரசுக்கு எதிராகவே ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.

    பிரம்மா மகளை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பாடம் நடத்திய பேராசிரியர்- எதிர்ப்பைத் தொடர்ந்து பணியிடை நீக்கம்

    இந்த குழப்பங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஹேமேந்த் சோரன் பேசுகையில், அரசை கவிழ்ப்பதற்கான சதி நடைபெறுகிறது என்றார். மேலும், அரசை கவிழ்க்க பாஜக தலைவர்கள் சதி செய்வதாக ஜேஎம்எம் மூத்த தலைவர் ராம்தாஸ் சோரன், காங்கிரஸ் எம்எல்ஏ அனுப் சிங் ஆகியோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதிலளிக்க விரும்பவில்லை, இதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரதிப் சின்ஹா கூறியுள்ளார்.

    கூட்டணி உடையுமா?

    ஏற்கனவே, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்த கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை வைத்து ஆட்சியை கவிழ்த்து, இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி கட்டிலில் ஏறியது .

    ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் மொத்தம் 81 இடங்கள் உள்ள நிலையில் பெரும்பான்மைக்கு 42 இடங்கள் தேவை. ஜேஎம்எம் கட்சியிடம் 30 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியிடம் 18 எம்எல்ஏக்களும் உள்ளனர். பாஜகவிடம் 26 எம்எல்ஏக்களும் அதன் கூட்டணியிடம் மொத்தமாக 30 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஒருவேளை, ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி அதிருப்தி காரணமாக உடையும் பட்சத்தில், ஜேஎம்எம் கட்சிக்கு தனது எம்எல்ஏக்களின் ஆதரவை அளித்து பாஜக தனது கூட்டணி ஆட்சியை ஜார்கண்ட்டில் அமைக்கும் வாய்ப்பு உள்ளது.

    முன்னுதாரணமாக, பிகாரில் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்து முதலமைச்சராக தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Congress, Jharkhand

    அடுத்த செய்தி