• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சமூக வலைதளத்தால் நின்று போன திருமணம்... லவ் ஜிகாத் என நிறுத்தியதாக மணப்பெண் போலீசில் புகார்...

சமூக வலைதளத்தால் நின்று போன திருமணம்... லவ் ஜிகாத் என நிறுத்தியதாக மணப்பெண் போலீசில் புகார்...

மாதிரி படம்

மாதிரி படம்

தனது பெற்றோரை மிரட்டியும், மூளை சலவை செய்தும் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை சிலர் நிறுத்த காரணமாக இருந்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு 28 வயதாகும் அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  • Share this:
இஸ்லாமிய இளைஞருடன் நடக்க இருந்த திருமணத்தை தனது பெற்றொருக்கு லவ் ஜிகாத் என எதிர்ப்பு தெரிவித்து ‘அழுத்தம்’ தந்து திடீரென நிறுத்திவிட்டதாக இந்து மதத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கர் பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, இஸ்லாமிய இளைஞர் ஒருவருடன் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டு திருமண வேலைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இவர்களுடைய திருமண அழைப்பிதழ் வாட்ஸ் அப் மூலம் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதை பார்த்த சிலர் இத்திருமணத்திற்கு எதிர்ப்ப்பு தெரிவித்து இது ‘லவ் ஜிகாத்’ என வர்ணித்தனர்.

Also Read:   கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊரார் முன்னிலையில் ஊர்வலமாக கூட்டிச் சென்ற கணவர் குடும்பத்தினர்!

இதனிடையே சிலரின் வற்புதலால் அப்பெண்ணின் பெற்றோர் தங்களது மகளின் திருமண சடங்குகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து தனது பெற்றோரை மிரட்டியும், மூளை சலவை செய்தும் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை சிலர் நிறுத்த காரணமாக இருந்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு 28 வயதாகும் அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்பெண் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, “இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் தனது வீட்டுக்கு வந்து இத்திருமணத்தை செய்ய வேண்டாம் என தன்னை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், பின்னர் நான் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்ததால், என்னுடைய பெற்றோரை சந்தித்து அவர்களை மிரட்டியும், மூளை சலவை செய்தும் உள்ளனர். இதனையடுத்து எனது பெற்றோர் என் திருமணத்தை திடீரென நிறுத்திவிட்டனர்.

Also Read:   போக்குவரத்து நெரிசலால் 2 மணி நேரம் காத்திருந்து கடுப்பான இளைஞர் செய்த விபரீத செயல்!

திருமணம் செய்யும் வயது இருப்பதாலும், எனது முடிவு என்பது எனது தனிப்பட்ட உரிமை என்பதாலும் என் திருமணத்தை நிறுத்த காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண் புகாரில் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என தெரிகிறது. சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரித்த போது, அந்த இரண்டு ஆண்களும், பெண்ணின் தந்தை உடல்நிலை குறித்து விசாரிக்க வந்ததாக கூறியுள்ளனர்.

அவ்விருவரையும் பெண்ணின் திருமணம் அல்லது குடும்ப விவகாரங்களில் தலையிடக் கூடாது என காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், பெண்ணுக்கு ஆதரவாக சில பெண் உரிமை அமைப்புகள் துணை நிற்பதால் இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: