சாதி மத மறுப்பு திருமணங்கள் சமூகத்துக்கு நல்லது! உச்ச நீதிமன்றம்

நாங்கள் சாதி, மத மறுப்பு திருமணத்துக்கு எதிரானவர்கள் அல்ல. இந்து-இஸ்லாமியர் திருமணமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

சாதி மத மறுப்பு திருமணங்கள் சமூகத்துக்கு நல்லது! உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
  • News18
  • Last Updated: September 11, 2019, 7:40 PM IST
  • Share this:
சாதி, மத மறுப்பு திருமணங்கள் சோசலிசத்தை வளர்த்தெடுக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சத்திஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இந்துப் பெண் ஒருவர் இஸ்லாமியர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவர் முறைப்படி இந்துவாக மதம்மாறினார். இருப்பினும், பெண்ணின் தந்தை, திட்டமிட்டு என் மகளைக் கடத்துவதற்காகவே திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் போலியானது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. பெண்ணின் தந்தை சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜரானார்.

பெண்ணைத் திருமணம் செய்தவர் சார்பாக ராகேஷ் திவேதி ஆஜரானார். பெண்ணின் சார்பாக கோபால் சங்கர்நாராயணன் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நாங்கள் சாதி, மத மறுப்பு திருமணத்துக்கு எதிரானவர்கள் அல்ல. இந்து-இஸ்லாமியர் திருமணமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அவர்கள் இருவரும் சட்டத்துக்குப்பட்டு திருமணம் செய்திருந்தால், அதில் என்ன பிரச்னை உள்ளது? இதன் மூலம் சாதிய பாகுபாடுகள் குறைந்தால் அது நல்லதுதான்.


உயர் சாதியைச் சேர்ந்தவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் மாறி மாறி திருமணம் செய்து கொள்ளவேண்டும். அது சிறப்பானது. அது சோசலிசத்துக்கு நல்லது. திருமணம் செய்து கொள்பவர்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அவர்களுடைய நேர்மையை உறுதிப்படுத்தவேண்டும். குறிப்பாக பெண்களின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை உள்ளது. அதன்காரணமாக, அந்தப் பெண்ணின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது’என்று தெரிவித்தனர்.

மேலும், அவர்களுடைய திருமணம் குறித்து நாங்கள் விசாரணை செய்யப்போவதில்லை. பெண்ணின் விருப்பத்தை உறுதிப்படுத்தவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இந்த வழக்குத் தொடர்பாக மாநில அரசு அதிகாரிகள் விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று கூறி வழக்கை செப்டம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also see:
First published: September 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்