முகப்பு /செய்தி /இந்தியா / காஷ்மீரில் ஊடுருவ ஆப்கன், பஸ்துன் தீவிரவாதிகளை இறக்கும் பாகிஸ்தான்- உளவுத்துறை எச்சரிக்கை

காஷ்மீரில் ஊடுருவ ஆப்கன், பஸ்துன் தீவிரவாதிகளை இறக்கும் பாகிஸ்தான்- உளவுத்துறை எச்சரிக்கை

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பல தீவிரவாதிகளை வரவழைத்து இருப்பதாகவும், பாகிஸ்தான் ராணுவமும் ஊடுருவ காத்திருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

  • Last Updated :

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவுவதற்காக ஆப்கன், பஸ்துன் தீவிரவாதிகளை பாகிஸ்தான் வரவழைத்து, தயாராக வைத்திருப்பதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இவ்விவகாரத்தில், சர்வதேச கவனத்தை பெறுவதற்கும் அந்நாடு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்கு, 100-க்கும் மேற்பட்ட ஆப்கன், பஸ்துன் தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இவர்களை வரவழைத்து இருப்பதாகவும், பாகிஸ்தான் ராணுவமும் ஊடுருவ காத்திருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

AlsoWatch:  டேட்டிங் செயலி மூலம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை வரவழைத்து வழிப்பறி! 

top videos

    First published:

    Tags: Jammu and Kashmir