• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தந்தையிடம் ரூ.75 லட்சம் வரதட்சணை வாங்கி மணமகள் செய்த செயலை பாருங்க

தந்தையிடம் ரூ.75 லட்சம் வரதட்சணை வாங்கி மணமகள் செய்த செயலை பாருங்க

Bride

Bride

மணமகளின் இந்த தன்னலமற்ற குணத்தை கண்டு திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் வியந்து பாராட்டினர். மேலும் மணமகள் அஞ்சலியை சமூக வலைத்தளங்கள் மூலமாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

  • Share this:
தந்தையிடம் 75 லட்சம் ரூபாயை வரதட்சணையாக வாங்கிய மணப்பெண் அதை பெண் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் மகளிர் தங்கும் விடுதியின் கட்டுமான செலவுக்கு நன்கொடையாக அளித்த சம்பவம் பாராட்டை பெற்றுத் தந்துள்ளது.

இந்திய திருமணங்களில் வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் பல்லாண்டு காலமாகவே பிரிக்க முடியாத பந்தமாகவே விளங்கி வருகிறது. பெண்களும், பெண் வீட்டாரும் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு வருவது அன்றாடம் கேள்விப்படும் நிகழ்வாக மாறியுள்ளது. ஆனால் வரதட்சணை வாங்குவதை மணப்பெண் ஒருவர் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கிறார்.

பொதுவாக பெற்றோருக்கு வரதட்சணை எனும் சுமையை பெண்கள் கொடுக்க விரும்பமாட்டார்கள் என்று தான் கேள்விப்பட்டு வந்திருக்கிறோம். ஆனால் தன் தந்தையிடம் 75 லட்ச ரூபாயை வரதட்சணையாக வாங்கிய மணமகள் ஒருவர் அதை மகளிர் கல்விக்காக பயன்படும் வகையில் நன்கொடையாக அளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Also read:  கொரோனா ஹாட்ஸ்பாட் ஆன மருத்துவக்கல்லூரி: 182 மாணவர்களுக்கு தொற்று உறுதி

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரைச் சேர்ந்த அஞ்சலி கன்வார் என்ற பெண்ணுக்கும், பிரவீன் சிங் என்ற பையனுக்கும் கடந்த நவம்பர் 21ஆம் தேதியன்று வெகுவிமரிசையாக மண்டபத்தில் திருமணம் நடந்திருக்கிறது. மணப்பெண் அஞ்சலி திருமணத்துக்கு முன்னர் தனது தந்தை கிஷோர் சிங் கனோத்திடம் சென்று, தன் திருமணத்துக்காக தரவிருக்கும் வரதட்சணை பணத்தை மகளிர் தங்கும் விடுதி கட்டுமானத்துக்காக நன்கொடையாக தந்துவிட வேண்டும் என கேட்டிருக்கிறார். மகளின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல அவரின் ஆசைப்படியே பணத்தை தருவதாக தந்தையும் உறுதியளித்திருக்கிறார்.

Bride Donates Dowry: സ്ത്രീധനമായി നല്‍കിയ 75 ലക്ഷം പെണ്‍കുട്ടികളുടെ ഹോസ്റ്റല്‍ പണിയാന്‍ നല്‍കി വധു - instead of rs 75 lakh rajasthan bride donated it to the construction of girls hostel ...
திருமணத்தின்போது மணமகள் அஞ்சலி


இந்நிலையில் திருமணத்திற்கு வருகை தந்திருந்த தராதரா மடாதிபதியான மஹந்த் பிரதாப் பூரியிடம் ஆசி வாங்கிய மணப்பெண் தனது ஆசை குறித்த கடிதத்தை கொடுத்திருக்கிறார். அதை வாங்கி திருமணத்திற்கு வருகை தந்திருந்த அனைவரின் முன்னிலையிலும் படித்த மடாதிபதி தன் தந்தையிடம் இருந்து பெறப்படும் வரதட்சணை பணத்தை பார்மரில் கட்டப்பட்டு வரும் மகளிர் தங்குமிட கட்டுமானத்துக்கு நன்கொடையாக அளிக்கப்பட வேண்டும் என அஞ்சலி விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

Also read:   தமிழ் பாட்டுக்கு கேரள பெண் போட்ட சூப்பர் குத்தாட்டம் - பெங்களூரு மாலில் ருசிகரம் 

உடனே அஞ்சலியின் தந்தை தொகை நிரப்பப்படாத வெற்று காசோலையை மகளிடம் கொடுத்து உன் ஆசைப்படி பணத்தை நிரப்பிக் கொள் என கூறவே, மகளும் 75 லட்ச ரூபாயை அந்த காசோலையில் நிரப்பி, அதனை பார்மரில் மகளிர் தங்கும் விடுதி கட்டுமான பணிகளுக்காக நன்கொடையாக தந்தார்.மணமகளின் இந்த தன்னலமற்ற குணத்தை கண்டு திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் வியந்து பாராட்டினர். மேலும் மணமகள் அஞ்சலியை சமூக வலைத்தளங்கள் மூலமாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

பார்மர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் மகளிர் தங்கும் விடுதிக்காக அஞ்சலியின் தந்தை கிஷோர் சிங் ஏற்கனவே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்திருக்கும் நிலையில், மேற்கொண்டு அதை கட்டி முடிக்க 75 லட்ச ரூபாய் மட்டுமே தேவையாக இருந்ததை அஞ்சலி தெரிந்து கொண்டு, அஞ்சலி தனது தந்தையிடம் வரதட்சணைக்காக வைத்திருந்த தொகையை வாங்கி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அஞ்சலியின் செயல் வரதட்சணை கொடுப்பது, வாங்குவதை புதிய நிலைக்கு எடுத்துச் சென்றிருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: