சினிமா ஹீரோக்களால் கவரப்பட்டு யானைக்கு முத்தமிடச் சென்ற வாலிபருக்கு நேர்ந்த கதி!

னத்துறையினர் அவரை யானைகளிடமிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சினிமா ஹீரோக்களால் கவரப்பட்டு யானைக்கு முத்தமிடச் சென்ற வாலிபருக்கு நேர்ந்த கதி!
சம்பவம் நடந்த பகுதி
  • News18
  • Last Updated: May 2, 2019, 4:37 PM IST
  • Share this:
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள மாலூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் திரைப்பட ஹீரோக்களால் கவரப்பட்டு யானைக்கு முத்தமிடச் சென்று போது மிதிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாலூர் வட்டத்திற்கு உட்பட்ட டி.என் டொட்டி என்ற கிராமத்திற்குள் யானைகள் கூட்டமாக வந்துள்ளன. இதை பார்த்த மக்கள் யானைகளுடன் செல்ஃபி எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் அதிகம் வருவதைக் கண்ட யானைகள் அங்கிருந்து செல்ல முடியாமல் திணறியுள்ளன. அந்த சமயத்தில் ராஜூ என்ற 24 வயது வாலிபர் தனது நண்பர்களுடன் படத்தில் வரும் ஒரு ஹீரோ போன்று தான் யானைக்கு முத்தமிட உள்ளதாகக் கூறிவிட்டு குடி போதையில் யானைகளின் அருகில் சென்றுள்ளார்.


ஏற்கனவே மனித கூட்டத்தைப் பார்த்து பதற்றமாக இருந்த யானை ஒன்று ராஜுவைத் தும்பிக்கையால் மரத்தின் மீது தூக்கிப்போட்டு மிதித்ததில் இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.

உடனே அங்கிருந்த வனத்துறையினர் அவரை யானைகளிடமிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது மயக்க நிலையில் உள்ள அந்த வாலிபருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த யானைக் கூட்டத்தைக் காட்டு பகுதிக்குள் திருப்பி அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், அங்குள்ள கிராமப்புற மக்களுக்கு யானை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகக் கர்நாடக வனத்துறை அதிகாரி தனலக்‌ஷ்மி தெரிவித்துள்ளார்.மேலும் பார்க்க:
First published: May 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading