ஆயுதங்களுடன் வாசலில் நின்ற தாலிபான்கள்.. பதைபதைப்பில் இருந்த இந்தியர்கள் - திக் திக் நிமிடங்கள்

Talibans

தூதரக வளாகத்திலேயே சுமார் 36 மணி நேரம் காத்திருந்த அவர்கள் அந்த வளாக காம்பவுண்ட் கேட்டின் எதிரே தாலிபான்கள் இருப்பதையும், அவர்கள் கைகளில் இயந்திர துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் இருப்பதை பார்த்து மிரண்டு போயிருக்கின்றனர்.

  • Share this:
தாலிபான்கள் இந்திய தூதரக ஊழியர்கள் உள்ளிட்ட இந்தியர்களை பாதுகாப்பாக காபுல் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றது எப்படி என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரை கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட் 15) தாலிபான்கள் சுற்றி வளைத்த நிலையில், வேறுவழியில்லாமல் உயிருக்கு பயந்த ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தனது சகாக்களுடன் விமானத்தில் தப்பிச் சென்றார். ஒட்டுமொத்த காபுல் நகரிலும் தாலிபான்கள் நடமாட்டம் அதிகரித்தது. காபுலில் தான் இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட பிற நாடுகளில் தூதரகம் அமைந்திருக்கிறது. அங்கு பணிபுரிந்து வந்த தங்கள் தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர், பாதுகாப்பு அதிகாரிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது.

Also Read: அஷ்ரப் கனியை கைது செய்ய இண்டர்போலுக்கு கோரிக்கை வைத்த ஆப்கன் தூதரகம்!

தாலிபான்களில் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அறியாத நிலையில் அங்கிருந்த இந்தியர்களின் ஹார்ட் பீட் எகிறியது. ஆப்கனுக்கான இந்திய தூதர் ருதேந்திர டாண்டன் உள்ளிட்ட இந்தியர்கள் சுமார் 150 பேர் தூதரகத்தில் பதைபதைப்புடன் மீட்கப்படுவதற்காக காத்திருந்தனர். தூதரக வளாகத்திலேயே சுமார் 36 மணி நேரம் காத்திருந்த அவர்கள் அந்த வளாக காம்பவுண்ட் கேட்டின் எதிரே தாலிபான்கள் இருப்பதையும், அவர்கள் கைகளில் இயந்திர துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் இருப்பதை பார்த்து மிரண்டு போயிருக்கின்றனர்.

Also Read:  பைக் வந்தாச்சு.. ஓலா எலக்ட்ரிக் கார் சந்தைக்கு வருவது எப்போது தெரியுமா?

இதனிடையே சிக்கிக் கொண்ட இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர இந்திய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. இதன் பின்னர் தாலிபான் தரப்பில் இந்தியர்களை பாதுகாப்பாக காபுல் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவு பறந்திருக்கிறது. இதையடுத்து இரண்டு வாகனங்களில் இந்தியர்கள் காபுல் விமான நிலையத்துக்கு கடந்த திங்களன்று பயணமாகியிருக்கின்றனர். அவர்களின் பாதுகாப்புக்கு தாலிபான்கள் வந்திருக்கின்றனர்.

திடீரென ஒரு வாகனத்தை மட்டும் விமான நிலையத்துக்கு செல்ல அனுமதித்த தாலிபான்கள், இந்திய தூதர் அடங்கிய மற்றொரு வாகனத்தை திரும்பிச் செல்ல வலியுறுத்தியிருக்கின்றனர். முதல் வாகனத்தில் 45 பேரும், 2வது வாகனத்தில் 80 பேரும் இருந்திருக்கின்றனர்.

Also Read:   உங்கள் தைரியத்துக்கும், உத்வேகத்திற்கும் சல்யூட்!’ – தாலிபான்களை பாராட்டிய இந்திய முஸ்லிம் அமைப்பு!

முதல் நாளில் விமானப் படை விமானம் மூலம் இந்தியர்கள் டெல்லி திரும்பியிருக்கின்றனர். மறுநாள் இந்திய தூதர் மற்றவர்கள் என அனைவரும் இந்தியாவுக்கு சி17 விமானம் மூலம் திரும்பியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியர்களை பத்திரமாக நாடு திரும்பிய இந்த சிக்கலான நடவடிக்கை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இந்தியர்கள் நாடு திரும்பிய உதவிய வெளிநாட்டினருக்கு அவர் நன்றி தெரிவித்திருக்கிறார். காபுல் விமான நிலையத்தை தற்போது அமெரிக்கர்கள் இயக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: