மறு வாக்குப்பதிவு கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்க டெல்லி செல்கிறார் சந்திரபாபு நாயுடு!

தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சியினர் வழங்கும் புகாரை வைத்து எந்த விசாரணையும் நடத்தாமல் செயல்பட்டு கொண்டிருப்பதாக சந்திர பாபு நாயுடு புகார் தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: April 13, 2019, 9:22 AM IST
மறு வாக்குப்பதிவு கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்க டெல்லி செல்கிறார் சந்திரபாபு நாயுடு!
சந்திரபாபு நாயுடு.
Web Desk | news18
Updated: April 13, 2019, 9:22 AM IST
முதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஆந்திரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று புகார் அளிக்க உள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.  அத்துடன்  மாநில தேர்தல் அதிகாரி கோபாலகிருஷ்ண திரிவேதியை, கட்சியின் மூத்த தலைவர்களுடன் நேற்று  நேரில் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு புகார்களை வழங்கினார். தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சியினர் வழங்கும் புகாரை வைத்து எந்த விசாரணையும் நடத்தாமல்  நேர்மையாக பணிபுரிந்து வந்த ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட முதன்மை செயலாளர் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்றும் மாநில தேர்தல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

எனவே, மறு வாக்குப்பதிவு நடத்துமாறு தேர்தல் ஆணையத்தில் இன்று மனு அளிக்க உள்ளார்.

Also see... எடப்பாடி பழனிசாமி ஒரு பச்சை தமிழன்; ராகுலுக்கு பொராதா கிருஷ்ணன் பதிலடி


Also see... தேர்தல் நிதி பத்திர விவகாரம்! உள்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...