இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் மற்றும் ராணுவ செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். மோர்முகா அதிநவீன போர் கப்பல் இந்திய கடற்படையுடன் இன்று இணைக்கப்படவுள்ளது.
மோர்முகா அதிநவீன போர் கப்பல், 163 மீட்டர் நீளமும் 17 மீட்டர் அகலமும் கொண்டது. 7 ஆயிரத்து 400 டன் எடை கொண்ட மோர்கோவா கப்பல், இந்தியாவில் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த போர்க்கப்பல்களில் ஒன்றாகும். மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக மோர்முகா போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கிய சிறப்பம்சமாக, அதிநவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரேடார் கருவிகள் மூலம், தரை மற்றும் வானில் உள்ள இலக்குகளை எளிதில் தாக்கும் வகையில் பிரமோஸ் ஏவுகணை தளவாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், நீர்மூழ்கி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்களும் மோர்முகா போர் கப்பலுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, அணு ஆயுதங்கள் மற்றும் உயிரியல் போர்முறையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய கப்பற்படைகளில் உள்ள எதிரிகளை தாக்கி அழிக்கும் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றாக மோர்முகா கருதப்படுகிறது.
இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த போர் கப்பலுக்கு, கோவாவில் பழமையான துறைமுகம் அமைந்துள்ள மோர்முகா எனும் இடத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மோர்முகா அதிநவீன கப்பலை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார். இதன் பின்னர் இக்கப்பல் கடற்படையுடன் இணைக்கப்பட்டு தனது பணியை தொடங்கவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mumbai, Rajnath singh