ஓடும் ரயிலில் கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த காவலர்! பெண் கைதி புகார்

கழிவறைக்குள் வழுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த காவலர் பெண் கைதியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுதொடர்பாக யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.

Web Desk | news18
Updated: August 7, 2019, 5:15 PM IST
ஓடும் ரயிலில் கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த காவலர்! பெண் கைதி புகார்
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: August 7, 2019, 5:15 PM IST
டெல்லியில் ஓடும் ரயிலில் கழிவறையில் வைத்து காவலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பெண் கைதி புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

புது டெல்லி ரயில்வே காவல்துறையில் திங்கள்கிழமை புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், ’திகார் சிறையிலிருக்கும் 42 வயது பெண் கைதி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவதற்காக மேற்குவங்க நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர்.

பின்னர், ஆகஸ்ட் 3-ம் தேதி மேற்குவங்கத்திலிருந்து திரும்பி வரும்போது டெல்லியில் ரயிலுள்ள கழிவறைக்கு பெண் கைதி சென்றுள்ளார். அப்போது, அவருக்கு பாதுகாப்பாக பெண் காவலர்கள் இருவர் இருந்துள்ளனர். அங்கு, ஆண் காவலர் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் போங்கள் என்று கூறியுள்ளார்.


பின்னர், கழிவறைக்குள் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த காவலர் பெண் கைதியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுதொடர்பாக யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளார். திகார் சிறையிலுள்ள மருத்துவரிடமும், சிறைக் கண்காணிப்பாளரிடமும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில், டெல்லி ரயில்வே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதுவரையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக மருத்துவ சோதனை நடைபெற்றுவருகிறது.

Also see:

Loading...

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...