முகப்பு /செய்தி /இந்தியா / அம்பேத்கர் குறித்த கருத்தால் சர்ச்சை - பாஜக அமைச்சர் மீது கருப்பு மை வீச்சு தாக்குதல்!

அம்பேத்கர் குறித்த கருத்தால் சர்ச்சை - பாஜக அமைச்சர் மீது கருப்பு மை வீச்சு தாக்குதல்!

அமைச்சர் மீது மை வீச்சு தாக்குல்

அமைச்சர் மீது மை வீச்சு தாக்குல்

அமைச்சர் மீதான மை வீச்சு தாக்குதல் தொடர்பாக அம்பேத்கர் அமைப்பை சேர்ந்த 3 பேரை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து பேசியதாகக் கூறி பாஜக அமைச்சர் ஒருவர் மீது கருப்பு மைவீச்சு தாக்கு நடத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாக் ஷிண்டே சிவசேனா மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்சியில் மாநில உயர்கல்வி அமைச்சராக இருப்பவர் சந்திரகாந்த் பாடீல். இவர் சில நாள்களுக்கு முன்பு மாகாரஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்ற பள்ளி விழாவில் அம்பேத்கர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலே குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் அமைச்சர் சந்திரகாந்த் பாடீல் பேசுகையில், அன்றைய காலத்திலேயே நாட்டில் பள்ளிகளை தொடங்கிய நடத்தியவர்கள் ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் போன்றோர்.

அதற்காக அவர்கள் அரசிடம் உதவிகளை நிதிகளை கேட்கவில்லை. மாறாக அவர்கள் மக்களிடம் யாசகம் கேட்டு நிதி பெற்று பள்ளி கல்லூரிகளை தொடங்கி நடத்தினர் என்று பேசினார்.இதில் அம்பேத்கர், பூலே ஆகியோரை யாசகம்(பிச்சை) கேட்டனர் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமைச்சருக்கு எதிராக அம்பேத்கர் அமைப்பினர் போராட்டம் நடத்திய நிலையில், நேற்று பிம்ரியில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சர் மீது கருப்பு மை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த கருப்பு மை தாக்குதலை அம்பேத்கர் அமைப்புகளான சமதா சைனிக் தல், வஞ்சித் பகுஜன் அகாதி ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

இந்நிலையில் விவகாரம் குறித்து அமைச்சர் பாடீல் விளக்கம் அளித்துள்ளார். "தான் அம்பேத்கரையும், பூலேவையும் சிறந்த கல்வியாளர்கள் என்று குறிப்பிட்டே அவ்வாறு பேசியிருந்தே. அரசை சாராமல் மக்களிடம் இருந்து பணம் பெற்று கல்வி வழங்கினார்கள் என்ற அர்த்தத்தைதான் அவ்வாறு சொன்னேன். யாசகம் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க கூடாதுதான். ஆனால் கிராமப்பகுதியில் இயல்பாக பேசும் வார்த்தை என்பதால் புரிவதற்கு அவ்வாறு பேசினேன். மன்னிப்பு கேட்டு இப்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது" என்றார்.

First published:

Tags: Ambedkar, Maharashtra, Viral Video