Home /News /national /

இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்

இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்

Agri products

Agri products

2020-21ம் ஆண்டில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதியின் மதிப்பு ரூ.35,477 கோடியாகவும், பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி ரூ.29,850 கோடியாகவும், எருமை இறைச்சி ஏற்றுமதி ரூ.23,460 கோடியாகவும் உள்ளது.

    உலகளாவிய வர்த்தகத்தில் பல சவால்களை சந்தித்த போதிலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி சீராக வளர்ச்சியடைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி வாரியம்(அபெடா) மூலம் வேளாண் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    Also read:  லாக்டவுன் விதிமீறியவர்களை துப்பாக்கி முனையில் ஊர்வலம் அழைத்துச்சென்று அவமதித்த சீன போலீசார்

    கடந்த 2011-12ம் நிதியாண்டில் ரூ.83,484 கோடியாக இருந்த, உணவுப் பொருட்கள் ஏற்றுமதி 2020-21ம் ஆண்டில் ரூ.1,53,050 கோடியாக அதிகரித்துள்ளதாக வர்த்தக புலனாய்வு மற்றும் புள்ளியியல் தலைமை இயக்குனரகம் (DGCI&S) தெரிவித்துள்ளது.

    வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதியில் பாஸ்மதி அல்லாத அரிசி முன்னணியில் உள்ளது. 2020-21ம் ஆண்டு மொத்த ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்காக அரிசி  உள்ளது.

    Also read:   10ல் ஒரு நபர் மட்டுமே ஆணுறை பயன்படுத்துகிறார் - தேசிய குடும்ப நல ஆய்வில் தகவல்

    2020-21ம் ஆண்டில் அபெடா ஏற்றுமதியில் முதல் 3 பொருட்களில் பாஸ்மதி அல்லாத அரிசி (23.22 சதவீதம்) பாஸ்மதி அரிசி (19.44 சதவீதம்) மற்றும் எருமை இறைச்சி (15.34 சதவீதம்)ஆகும். இவை மூன்றும் மொத்த ஏற்றுமதியில் 58 சதவீதம் வகிக்கின்றன.

    2020-21ம் ஆண்டில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதியின் மதிப்பு ரூ.35,477 கோடியாகவும், பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி ரூ.29,850 கோடியாகவும், எருமை இறைச்சி ஏற்றுமதி ரூ.23,460 கோடியாகவும் உள்ளது.

    Also read:  உலகிலேயே முதல் முறையாக கைகளால் இல்லாமல் மூளையின் சிக்னலால் ட்வீட் செய்த மனிதர்!
    Published by:Musthak
    First published:

    Tags: Agriculture

    அடுத்த செய்தி